48 மணி நேரம் வேலை செய்தால் ஈவ் டீஸிங்கை கூட தடுக்க முடியாது! கொல்கத்தா பலாத்காரம்-நீதிமன்றம் விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை மத்திய புலனாய்வுத் துறை இன்று சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிபிஐ விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் முன் இன்று அளித்தது.

kolkata

வாதம்; இந்த வழக்கில் இன்று மனுதாரர்கள் தரப்பு வைத்த வாதத்தில், டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். காரணம் அவர்களுக்கு அச்சம்.

நீதிபதிகள்: யாரை பார்த்து அச்சம்.

மனுதாரர்கள் தரப்பு : எல்லோரையும் பார்த்து.. அரசு மீண்டும் பணிக்கு வந்தால் ஆக்சன் எடுக்கும். வேலைக்கு சென்றால் பாதுகாப்பு இல்லை. வெளியே கலவரர்காரர்கள் இருக்கிறார்கள். சிலர் நாங்கள் போராடியதால் எங்களுக்கு எதிராக கோபத்தில் உள்ளனர்.

மத்திய அரசு தரப்பு: மருத்துவர்களுக்கு கண்டிப்பாக அரசு தரப்பு பாதுகாப்பு தரும். மத்திய அரசு சார்பாக பாதுகாப்பு வழங்கப்படும்.

மனுதாரர்கள் தரப்பு: மருத்துவர்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.. அப்படி இருக்கும் போது உங்களை ஈவ் டீசிங் செய்தால் கூட அதை எதிர்க்கும் மனநிலை இருக்காது.. உடல்வலிமை இருக்காது.. அப்படி இருக்க அந்த மருத்துவரால் என்ன செய்ய முடியும்.. மருத்துவர்களுக்கு தேவையின்றி மிக அதிக நேரம் பணி கொடுக்கப்படுகிறது.

நீதிபதிகள் : நீங்கள் சொல்வது புரிகிறது.. மருத்துவர்கள் மிக அதிக நேரம் பணி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!

விசாரணை பின்னணி: முன்னதாக. கொல்கத்தா பலாத்காரம் -கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 22-ம் தேதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. மேலும், மருத்துவமனையில் நடந்த கலவரம் குறித்தும் சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இது தொடர்பாக அனைத்து விவரங்களையும் அறிக்கையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்காக நாடு காத்திருக்க முடியாது . வேரூன்றி போய் உள்ள ஆணாதிக்க மனநிலை காரணமாக நோயாளிகளின் உறவினர்கள் பெண் மருத்துவர்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பல மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் கூட மருத்துவர்களுக்கு செய்து தரப்படுவதில்லை.

சிசிடிவி கேமராக்கள் கிடையாது. பணிபுரியும் இடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு என்பது பிரச்சனைக்குரியதாகவே இருக்கிறது. மருத்துவருக்கு என்று தனி கழிப்பிடம் கூட இல்லாத சூழல் நிலவுவதை பார்க்க முடிகின்றது. அமைதியான போராட்டக்காரர்கள் மீது மேற்கு வங்க மாநில அரசு தனது அதிகாரத்தை கட்டவிழ்த்து விட வேண்டாம், என்று உச்ச நீதிமன்றம் கண்டனங்களை வைத்தது.

பாதுகாப்பு: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய பணி குழுவை அமைக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணர், வைஸ் அட்மிரல் ஆர் சரின்
டாக்டர் எம் ஸ்ரீனிவாஸ்
டாக்டர் பிரதிமா மூர்த்தி
பேராசிரியை அனிதா சக்சேனா, ஹெட் கார்டியாலஜி, எய்ம்ஸ் டெல்லி
டாக்டர் கோவர்தன் தத் பூரி
டாக்டர் டி நாகேஷ்வர் ரெட்டி
டாக்டர் சௌமித்ரா ராவத்
பேராசிரியர் பல்லவி சப்ரே, டீன் கிராண்ட் மருத்துவக் கல்லூரி மும்பை
டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவா, நரம்பியல் துறை, எய்ம்ஸ் ஆகியோர் குழுவில் உள்ளனர்

இவர்களுடன் மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் மத்திய உள்துறை செயலாளர் சுகாதாரத் துறையின் செயலாளர் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் தேசிய தேர்வாளர்கள் குழுவின் தலைவர் ஆகியோரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்

விசாரணை: இதற்கிடையில், RG கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ தொடர்ந்து ஆறாவது நாளாக விசாரணை செய்து வருகிறது. அதேபோல் சஞ்சோய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள பிரச்சினையை ஆராய, உச்ச நீதிமன்றத்தால் தேசிய பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையும், இரண்டு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு பணிக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போக.. இதுவரை வேலைநிறுத்தம் செய்து வரும் டாக்டர்கள் அமைப்புகள், தேசிய பணிக்குழுவுக்கு தகவல் அளித்து ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளதுடன், இப்பிரச்சினையில் மத்திய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.. கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் கோரியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+