கூவத்தூர் 2.0.. மாமல்லபுரத்தில் குவிக்கப்படும் தவெக ச.ம.உ.க்கள்! விஜய் போட்ட பக்கா ப்ளான்! என்னவாம்?
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பதற்காக முக்கிய அரசியல் நகர்வுகள் விஜய் மூலம் நடைபெற்று வருகின்றன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், முதல் தேர்தலிலேயே 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 107 சட்டமன்ற உறுப்பினர்களும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூவத்தூர் பாணியில் அங்கு அனைத்து எம்.எல்.ஏ.க்கும் 'சகல வசதிகளும்' செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
234 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 73 இடங்களிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், தவெக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னை அருகே மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் தமிழக அரசியலில் "கூவத்தூர் பாணி" என்று பேசப்பட்ட சம்பவத்தை நினைவூட்டும் வகையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 108 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள தமிழ் வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற்றனர். பின்னர் அங்கிருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள ஃபோர் பாயிண்ட் ஃபை ஸ்டார் என்னும் தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் தவெக ஆட்சி அமைக்கும் வரை இங்கே தங்குவதற்கான அனைத்து ஏற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏக்கள் ஒரே இடத்தில் இருக்கச் செய்வது தான் விஜய்யின் திட்டம் எனச் சொல்லப்படுகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications