"ஒற்றைத் தலைமை"..ஜெயக்குமார் யாரு? இவர் என்ன அதிமுகவின் செய்தித் தொடர்பாளரா? வெளுத்த கோவை செல்வராஜ்
சென்னை: ஒற்றைத் தலைமை குறித்து பேசுவதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன அதிமுகவின் செய்தித் தொடர்பாளரா என அந்த பதவியில் இருக்கும் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதித்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டு உடைத்துவிட்டார். இது நாளுக்கு நாள் பற்றி எரிகிறது.
மேலும் ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்த பேட்டியை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினரும் ஈபிஎஸ் தரப்பினரும் மாறி மாறி போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். அந்த போஸ்டர்களை ஒருவருக்கு ஒருவர் கிழித்து வருகிறார்கள்.

ஓபிஎஸ் வீட்டில்
நேற்றைய தினமும் ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொண்டர்களும் இரு தலைவர்களின் வீடுகள் முன்பு குவிந்துள்ளார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

கோவை செல்வராஜ்
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயக்குமாரின் கருத்து கட்சியின் கருத்து அல்ல, அவர் என்ன அதிமுகவின் செய்தி தொடர்பாளரா, அவர் கூட்டத்தில் நடந்ததை பற்றி ஊடகங்களிடம் பேசியதே தவறு.

சுயநலம்
அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். ஜெயக்குமாரின் கருத்து அவருடைய சொந்த கருத்தாக இருக்கலாம். அதை அதிமுகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒற்றைத் தலைமைக்கான ஆலோசனை எங்கும் நடைபெறவில்லை. ஒரு சிலர் சுயநல ஆசைக்காக கூறுகிறார்கள். தனிப்பட்ட முறையில் யாருடைய கை ஓங்குவதையும் தொண்டர்கள் விரும்பவில்லை.

ஓபிஎஸ் விட மாட்டார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சீராக கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் ஒற்றைத் தலைமை என்பதை ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் விரும்பவில்லை. ஆனால் அவரை சுற்றியுள்ள சில முன்னாள் அமைச்சர்கள் குட்டி ராஜாக்களை போல் இவ்வாறு செய்து வருகிறார்கள். கட்சியை அழிக்க யார் நினைத்தாலும் ஓபிஎஸ் விடமாட்டார் என்றார் கோவை செல்வராஜ்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications