கோயம்பேடு வந்த 20 வயது பெண்.. வடபழனி ஓட்டலுக்கு கூட்டி சென்ற 50 வயது காதலன்.. இறுதியில் ட்விஸ்ட்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 50 வயதுடைய இரண்டு பேர் மீது புகார் அளித்தார். பெங்களூருவில் உள்ள நடன கிளப்பில் வேலை செய்து வந்தபோது, சோழிங்கநல்லூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் காதலிப்பதாக கூறினார். வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அழைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதனால் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்று புகார் அளித்துள்ளார். இதன் பேரில் காதலன் மற்றும் டிரைவர் கைதாகி உள்ளனர்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றும் ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தால், போலீசார் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். அதேநேரம் இருவரும் திருமணமான ஆண் அல்லது பெண் என்றால் அந்த புகாரை கொடுத்து வழக்கு தொடர முடியாது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஏனெனில் அண்மையில் உச்ச நீதிமன்றம், திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் கொடுத்த வழக்கில், புகார் அளித்தவரை கண்டித்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவரை வழக்கில் இருந்து விடுவித்தது.திருமணம் செய்வதாக ஏமாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டும் என்றால், திருமணம் ஆகாத நபராக இருக்க வேண்டும். அந்த பெண்ணும் திருமணம் ஆகாமல் இருக்க வேண்டும் அல்லது விவாகரத்து செய்திருக்க வேண்டும். கோயம்பேடு சம்பவம் பற்றி பார்ப்போம்.
பெங்களூர் கிளப்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அந்த பெண் கூறுகையில், "நான் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நடன கிளப்பில் வேலை செய்து வந்து வந்தேன். அப்போது எனது உறவினருக்கு தெரிந்தவரான சோழிங்கநல்லூரை சேர்ந்த சுந்தரம் (வயது 50), என்பவர் பழக்கம் ஆனார்.
வடபழனி ஓட்டல்
சுந்தரம் என்னை காதலிப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லை என அவரது டிரைவர் அரி கிருஷ்ணன் (50), என்பவர் தன்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரக்கூறினார். அதனால் நானும் சென்னை கோயம்பேடுக்கு வந்தேன். அப்போது என்னை அரி கிருஷ்ணன் வடபழனியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றார். வடபழனில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சுந்தரம், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.
7 மாத கர்ப்பம்
நான் கடந்த வாரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று பரிசோதனை செய்து பார்த்தேன். அப்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து சுந்தரத்திடம் கேட்டபோது, கருவை கலைத்து விடுமாறு கூறினார். திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
காதலன் மற்றும் டிரைவர் கைது
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரம் மற்றும் அவரது டிரைவர் அரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் நேரில் அழைத்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில், சுந்தரம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததும், கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியது உண்மை எனவும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த கோயம்பேடு மகளிர் போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications