Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் மாறுவேடத்தில்.. மீண்டும் மார்க்கெட்டில் கிளம்பிய சிக்கல்.. சென்னை போலீசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி கடை மார்க்கெட்டாக விளங்கி கொண்டிருக்கிறது சென்னையின் கோயம்பேடு மார்க்கெட்.. உள்ளூர், வெளியூர் என ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குற்ற சம்பவங்கள் பெருகியிருப்பதாகவும் புகார்கள் கிளம்பியிருக்கின்றன.. இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் சொல்வதென்ன? உண்மையிலேயே கோயம்பேட்டில் என்ன நடக்கிறது?

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது.

Koyambedu Bus Stand Chennai Koyambedu market

மிகப்பெரிய காய்கறி சந்தை என்பதால், ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் வந்து செல்வது வழக்கமாகும்.. இதனால் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படுவது இயல்பாகிவிடுகிறது..

கோயம்பேடு மார்க்கெட்

இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே, அங்காடி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.. கோயம்பேடு மார்க்கெட் அருகே அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ள 300க்கும் மேற்பட்ட கடைகளால், தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்தில் புகார் அளித்து வந்தனர்..

இதையடுத்து, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள இடத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்தியிருந்தார். எனினும்கூட, அங்காடி அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அதே இடத்தில் முளைத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வலம்வர துவங்கியிருக்கின்றன..

இந்துமதி அதிரடி

எனவே, கடந்த வாரமும், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஆய்வு செய்து,இ போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 300 ஆக்கிரமிப்பு கடைகளை ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தியிருந்தார்.

இதுபோல போக்குவரத்து இடையூறு ஒருபக்கம் என்றால், குற்ற சம்பவங்களும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அடிக்கடி நடந்துவிடுவது, அச்சத்தை தந்து வருகிறது..

மாறுவேடத்தில் யார்

சில மாதங்களுக்கு முன்பு, கோயம்பேடு மார்க்கெட்டில், கத்தியுடன் 3 இளைஞர்கள், இரவு நேரங்களில் சுற்றி திரிந்ததுடன், மார்க்கெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களின் செல்போனையும் திருடி சென்றிருந்தனர்.. அத்துடன் பூட்டப்பட்டிருந்த கடைகளிலும் நுழைந்து அத்துமீறி பொருட்களை களவாடி சென்றிருந்தனர்..

இதையடுத்து, போலீஸாரின் தீவிரமான கண்காணிப்பும், பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டது.. அத்துடன், உயர் கோபுரத்தின் மீது போலீசார் பைனாகுலர் மூலமும் கண்காணித்தனர்.. சிலசமயங்களில் மாறுவேடத்திலும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.. இதனால் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைய துவங்கின..

மீண்டும் கிளம்பிய கோரிக்கை

இந்நிலையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார் கிளம்பியிருக்கிறது.. இரவு நேரங்களில் வெளியாட்கள் மதுஅருந்திவிட்டு, அட்டகாசம் செய்வதுடன், மார்க்கெட்டில் தனியாக நடந்துச்செல்லும் வியாபாரிகள், கூலி தொழிலாளர்களை மறித்து கத்தியை காட்டி செல்போன், பணம் போன்றவற்றை பறித்து விடுகிறார்களாம்.. இதனால், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்..

கோயம்பேடு மார்க்கெட்டில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இதுகுறித்து பலமுறை புகார் தந்தும்கூட, நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவில்லை.. எனவே, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேரங்களில் மார்க்கெட் பகுதிகளில் போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+