Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு "காலி".. கோயம்பேட்டில் விபச்சாரமா? சென்னையில் என்ன நடக்குது? இதெல்லாம் நிஜமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் சமூக விரோத செயல்கள் அதிகரித்துவிட்டதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன.. குறிப்பாக, பஸ் ஸ்டாண்டு பயன்பாடு குறைந்துள்ளதையடுத்து, இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, வீடியோக்கள இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகின்றன.

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அதனால், அரசு விரைவு பஸ்கள் உட்பட ஆம்னி பஸ்கள் எல்லாமே கிளாம்பாக்கத்துக்கு போய்விட்டதால், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இயக்கப்பட்டு வருகின்றன..

Koyambedu Bus Stand Koyambedu Market Chennai

கோயம்பேடு: இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை.. பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.. முன்புபோல பஸ் கோயம்பேடு பிஸியாக இல்லாத காரணத்தினால், சமூக விரோதிகள், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வருகிறார்களாம்.

சுற்றுவட்டார பகுதிகளிலிருக்கும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் போன்றோர், குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பதுங்கி கொள்வதாகவும், மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிடுவதாகவும் புகார் கிளம்பியது.

அச்சத்தில் வியாபாரிகள்: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே சிலர் கைவரிசையையும் காட்டுவதால், குறைந்த அளவுக்கு வந்து போகும் பயணிகளும், அச்சமடைந்துள்ளதாகவும், எனவே கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் போதுமான பாதுகாப்பை அதிகரித்து, சமூக விரோதிகளின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் கோயம்பேடு வியாபாரிகளே மீடியா மூலமாக காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்

இதுபோலவே, கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக பகீர் புகார்கள் கிளம்பி வருகின்றன.. சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதி எந்நேரமும் பிஸியாகவே இருக்கக்கூடிய இடமாகும்.. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் சிலா் வாகன திருட்டில் ஈடுபடுவதுடன், தனியாக சிக்கும் வியாபாரிகள், பொதுமக்களை மிரட்டி அவா்களிடமிருந்து பணம், செல்போன்களை பறித்துச்செல்லும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபடுவதாக புகார் கிளம்பியது.

கோரிக்கை: எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் பாதுகாப்பு நலன் கருதி, சந்தை வளாக பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என வியாபாரிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த கோரிக்கையை ஏற்ற கோயம்பேடு அங்காடி நிா்வாகம், சந்தை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்து, அந்த பணிகளிலும் துரிதமாக ஈடுபட்டது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொத்தம் 200 கண்காணிப்பு கேமராக்களை முதல் கட்டமாக பொருத்தியிருக்கிறது.. இதற்கான கட்டுப்பாட்டு அறை அங்காடி நிா்வாக அலுவலகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள்: எனினும், சமூகவிரோத செயல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக, பிரபல சேனல்கள் வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றன.. கோயம்பேட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து, வியாபாரிகளும், பொதுமக்களும் அந்த சேனலுக்கு அளித்த பேட்டியில் விலாவரியாக கூறியிருக்கிறார்கள்.

அதில், மார்க்கெட் பகுதியில் கஞ்சா வியாபாரம் அதிகமாக நடக்கிறதாம்.. இங்கு பணிபுரியும் பெரும்பாலானோர் வலி தொழிலாளர்கள் என்பதால், அவர்களை கஞ்சாவுக்கு அடிமைப்படுத்தும் செயல்களும் பெருகி வருவதாகவும், குறிப்பாக பூ மார்க்கெட் பகுதியில் கஞ்சா வியாபாரம் தலைதூக்கியிருப்பதால், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்கெட் வியாபாரிகள் அந்த பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விபச்சாரம்: அதேபோல, விபச்சாரமும் இங்கு பெருகி வருவதாக சொல்கிறார்கள். கோயம்பேடு பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் தனியாகவே விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் முதல் வெளியூர் வியாபாரிகள்வரை அந்த விடுதியை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வருவதாகவும், கோயம்பேடு கூலி தொழிலாளிகளே சொல்கிறார்கள். கோயம்பேடு தற்போது காலியாகிவிட்டது, இவர்களுக்கெல்லாம் வசதியாகிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

அதேபோல, இன்னொரு சேனலும் கோயம்பேடு பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை படம்பிடித்து வெளியிட்டிருக்கிறது.. இளைஞர்கள் பலர், நைட் நேரத்தில் டூவீலர்களில் வந்து அம்மா வயதுள்ள பெண்களிடம் பேரம் பேசுகிறார்களாம்.. இரவு நேரத்தில்தான் 18 முதல் 20 வயதுள்ள இளைஞர்கள் அதிகமாக இங்கு வருவதாக கூறுகிறார்கள்.

வீடியோ: கோயம்பேடு பகுதியில் விபச்சாரத்திற்கு தயாராக உள்ள பெண்களிடம் இந்த இளைஞர்கள் பேரம் பேசுவதாகவும், இதிலும், தங்கள் அம்மா வயதுள்ள பெண்களிடம் பேரம் பேசுவதை பார்க்கும்போது, அதிர்ச்சியாக உள்ளதாகவும், இதனால் இளைய சமுதாயம் மேலும் சீரழிய வாய்ப்புள்ளதால், அதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அங்குள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பிரபல சேனல்கள் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோக்கள் அனைத்துமே தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தினால், மக்களுக்கு நிம்மதியாக இருக்கும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+