கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மாற்றம்.. 104C நம்பரை நோட் பண்ணுங்க.. கோயம்பேடு டூ கூடுவாஞ்சேரி என்னாச்சு?
சென்னை: வார விடுமுறையையொட்டி, இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
வழக்கமாக விசேஷ நாட்களிலும், வார இறுதி நாட்களிலும், பண்டிகைகளின்போதும், பொதுமக்களின் நன்மைக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை கூடுதலாக இயக்குவது வழக்கம். அந்தவகையில், இப்போது வார விடுமுறை என்பதால், சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவு பேருந்து: சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 880 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுவாஞ்சேரி: இப்படிப்பட்ட சூழலில், கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாநகர் போக்குவரத்துக் கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பஸ்களை இயக்கி வருகின்றன. மேலும், ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் எண் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி cut பஸ், தடம் எண் 104சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி பஸ், தடம் எண்.104சிஎக்ஸ் என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்.
பழைய எண்கள்:-
புதிய எண்கள்:-
ரயில்வே நிலையம்: இந்த 104C என்ற வழித்தடத்தில், போரூர் டோல் கேட், மதுரவாயல் வழியாக புறவழிச்சாலையிலும் கிளாம்பாக்கத்திற்கு கோயம்பேட்டில் இருந்தும் இயங்குகிறது. எனினும், பஸ்ஸில் சென்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால்தான், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற எதிபார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications