Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சாணிக்கு உயர்ந்த மளிகை பொருட்கள் விலை.. பாமாயில், புளியை பாருங்க.. கண்ணீரில் தமிழக மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மளிகை பொருட்கள் விலையும் தமிழகத்தில் தாறுமாறாக எகிறி உள்ளது.. என்ன காரணம்? இந்த விலை உயர்வு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பும் கவலையும் மக்களை கவ்வி வருகிறது.

தக்காளி விலை, தமிழகத்தில் கலக்கத்தை தந்து வருகிறது.. தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக விலை குறையாமல் உள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், வரத்துக் குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.. அதிலும், துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.

Koyambedu market and grocery items rise in prices of rice in tamil nadu markets

என்ன காரணம்: ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால்தான், தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணம் சொல்கிறார்கள். எனினும், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. து.பருப்பை தவிர, பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.

இவைகளில், அரிசியை பொறுத்தவரை 6 மாதங்களுக்கு முன்பு 900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ எடை கொண்ட சாதா பொன்னி அரிசி மூட்டை, இப்போது ஆயிரத்து 50 ரூபாயாகவும், நடுத்தர பொன்னி அரிசி ஆயிரத்து 250ல் இருந்து ஆயிரத்து 500ஆகவும் அதிகரித்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட பச்சரிசி மூட்டையும் ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது.

விளைச்சல் குறைவு: இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் சொல்லும்போது, தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆனால், விளைச்சல் குறைந்திருப்பதால், தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

துவரம் பருப்பை பொறுத்தவரையில் மகாராஷ்டிரத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது. அதனால்தான் துவரம் பருப்பின் விலை அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.

மிளகாய் தூள்: அதேபோல மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களாலும், மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய வணிகர்கள் சங்க தலைவர் மணிவண்ணன் சொல்லும்போது, "வழக்கமாக, நாட்டில் ஒவ்வொரு உணவுப்பொருளும் 6 மாதங்களுக்கு தேவையான அளவில் இருப்பு இருக்கும்... மொத்த வியாபாரிகளால் அடிக்கடி பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவது வழக்கம்... இதை தடுத்தால், விலை உயர்வை நிச்சயம், 15 நாட்களில் கட்டுப்படுத்த முடியும்.

உணவுபொருட்கள் பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க கூட்டுறவு துறைக்கு அதிகாரம் உள்ளது.. அதை பயன்படுத்தி, வரம்பு மீறாமல் ஆய்வு செய்தால், பதுக்கலை கட்டுப்படுத்தி விலை குறைக்க முடியும்... தக்காளியோடு நின்றுவிடாமல் மற்ற பொருட்கள் மீதும் கூட்டுறவு துறை கவனம் செலுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மளிகை பொருட்கள் விலை நிலவரம்:

பொருள் - பழைய விலை - புதிய விலை(ரூபாய்)

துவரம்பருப்பு - 119 - 150
உளுத்தம்பருப்பு - 112 - 124
கடலைபருப்பு - 61 - 66
சிறுபருப்பு - 91 - 102
சீரகம் - 300 - 680
மிளகு - 500 - 550
வெந்தயம் - 75 - 84
கடுகு - 70 - 74
புளி - 110 - 150
பூண்டு - 80 - 150
நீட்டு மிளகாய் - 230 - 260
சுக்கு - 260 - 350
நிலகடலை - 110 - 125

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+