கேபி முனுசாமி ரூ.1 கோடி கேட்டது உண்மைதான்.. இதெல்லாம் அரசியல்ல சகஜம் : அதிமுக மாஜி ராஜேந்திர பாலாஜி
கே.பி.முனுசாமி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ. 1 கோடி கேட்டது தொடர்பாக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
சென்னை : "ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோ உண்மை தான். ஆனால், எம்.எல்.ஏ சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி ரூ.1 கோடி கேட்டார் என்பதில் உண்மையில்லை. அரசியலில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி தன்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டதாக கூறியதோடு, அதுதொடர்பான ஆடியோவையும் வெளியிட்டார்.
அதிமுகவில் சீட்டுக்காக முன்னாள் அமைச்சர் ரூ. 1 கோடி கேட்டதாக குற்றம்சாட்டிய விவகாரம் பகீர் கிளப்பிய நிலையில், அதுகுறித்துப் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகிறார். இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் அதிமுக வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முனுசாமியால் அதிருப்தி
இப்படியான பரபரப்பான சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, இரட்டை இலை சின்னம் வெற்றிபெற அதிமுக தொண்டர்கள் உழைக்கிறார்கள், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார். கேபி முனுசாமியின் இந்தப் பேச்சால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கே.பி.முனுசாமிக்கு எதிரான ஒரு ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டனர்.

பகீர் குற்றச்சாட்டு
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட என்னிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் பணம் கேட்டார். மேலும், பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்றும் கே.பி.முனுசாமி கூறினார். என்னைப் போல் பணம் கொடுத்து கே.பி.முனுசாமியிடம் பலர் ஏமாந்துள்ளனர், அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார் என பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

ஆடியோ ஆதாரம்
மேலும், கே.பி.முனுசாமி ரூ. 1 கோடி பணம் கேட்டது தொடர்பாக ஒரு ஆடியோவையும் வெளியிட்டார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அந்த ஆடியோவில், கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும், முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு ரூ.50 லட்சம் தருவதாக இருவரும் உரையாடும் ஆடியோ வெளியானது. மேலும், நிர்வாகிகள் நியமனத்துக்காகவும் ரூ.1 கோடி கேட்டு கேபி முனுசாமி பேரம் பேசியதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகார் தெரிவித்தார்.

முனுசாமி ஒப்புதல்
இந்த ஆடியோ விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான். ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கடனாகக் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர். ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

கொடுக்கல் வாங்கல் சகஜம்
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோ உண்மை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ஆடியோ உண்மையானது தான். ஆனால், எம்எல்ஏ சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி ரூ.1 கோடி கேட்டார் என்பது உண்மையில்லை. அரசியலில் கொடுக்கல் வாங்கல் சகஜமாக நடப்பது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications