சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாரு 2 பேர்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்.. முனுசாமி சொன்ன "அந்த" வார்த்தை.. இழையோடும் மனிதநேயம்

சசிகலா உடல்நிலை குறித்து கேபி முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எதிரியாக இருந்தாலும் நாங்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம்... சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும்... அவரது குடும்பத்தினருக்கு சேவை செய்யட்டும்" என்று அதிமுகவின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கருத்து கூறியுள்ளார்.

சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டது... இதற்கு பிள்ளையார் சுழி போட்டு பேச்சை ஆரம்பித்ததே முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராதான்.. திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்..

சசிகலாவுக்கு ஆதரவு அமைச்சர்கள் என்று சொல்லப்படும், செல்லூர் ராஜூ, ஓஎஸ் மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆகியோர் அமைதியாகவே இருக்கிறார்கள்.

கோகுல இந்திரா

கோகுல இந்திரா

இதற்கு பிறகு, வழக்கம்போல ராஜேந்திர பாலாஜியும் குரல் கொடுத்தார்.. இன்னும் ரிலீசுக்கு முன்னாடியே இவர்கள் இப்படி பேசுகிறார்களே என்று எடப்பாடியார் தரப்பு அதிர்ந்து போய்விட்டது.. அதனால், அந்த 2 பேரையும் கண்டித்ததாகவும் சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, வேறு யாரும் சசிகலா பற்றி பேசக்கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உத்தரவு

உத்தரவு

இது எல்லாவற்றிற்கும் மேலாக, யாரெல்லாம் சசிகலாவால் கடந்த காலங்களில் பயன்பெற்றவர்கள், யாரெல்லாம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள் என்ற லிஸ்ட் எடுக்கும்படியும் மறைமுகமாக எடப்பாடியார் தரப்பு உத்தரவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இந்த சமயத்தில்தான், ரிலீஸ் ஆகி வருவதற்கு முன்னாடியே சசிகலாவை ஜெயிலிலேயே சந்திக்க 2 அமைச்சர்கள் விண்ணப்பம் தந்திருந்த விஷயமும் வெளியே வந்தது.. யார் அந்த 2 பேர் என்று தெரியவில்லை.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

இதுபோக, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திலும், அந்த பக்கம் தாவிடாதீங்க என்று முதல்வரும், துணை முதல்வரும் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது... இப்படி, சசிகலாவின் வருகை அதிமுக தலைமையை பெரும் கலக்கத்தில் ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர் கேபி முனுசாமி ஒரு பேட்டி தந்துள்ளார்.

சசிகலா

சசிகலா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, "எதிரியாக இருந்தாலும் நாங்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும். அவரது குடும்பத்தினருக்கு சேவை செய்யட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

இதே முனுசாமிதான் அன்று, "7தவறுகள் செய்துள்ள சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.. இதே முனுசாமிதான், "சசிகலாவை வெளியேற்றிவிட்டால் அமமுக, அதிமுகவில் நாங்கள் அண்ணன், தம்பிகள்" என்றார். இதே முனுசாமிதான், "சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமில்லை.. சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுகவிலோ, அரசியலிலோ எந்த தாக்கமும் ஏற்படாது.. தன்னை பொறுத்தவரை ஜெயலலிதாவின் உதவியாளர் அவர்" என்றார்.

மனிதாபிமானம்

மனிதாபிமானம்

இப்போது, முனுசாமி சசிகலாவின் உடல்நிலை குறித்து கருத்து கூறியுள்ளது மனிதாபிமானத்தின் அடிப்படையில் என்றே எடுத்து கொண்டாலும், சசிகலா தரப்பினரிடம் யாரும் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முனுசாமியின் இந்த பேட்டி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுதாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே சிறையில் மனு தந்த 2 பேர் யார் என்று தெரியாத நிலையில், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முக்கிய நிர்வாகிகள் யாராவது சசிகலா தரப்பிடம் தொடர்பு வைத்துக்கொள்கிறார்களா என்று கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி!

English summary
KP Munusamy says about Sasikalas health Condition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X