"அந்தக் கூட்டம் தலையெடுக்கக் கூடாது”.. விஜய் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அட்டாக்!
சென்னை: "ஏதோ ஒரு மாயத் தோற்றத்தை வைத்துக்கொண்டு முதலமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது, அந்தக் கூட்டம் தலை எடுக்கக் கூடாது" என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடி கேபி.முனுசாமி பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு வரவுள்ள 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது கூட்டத்தில் பேசிய கேபி முனுசாமி, தவெக தலைவர் விஜய்யை கடுமையாகச் சாடினார். கேபி முனுசாமி பேசுகையில், "இப்போது ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக வருவதாக கூறுகிறார். அவர், வெளிநாட்டில் காரை வாங்கி வரி கட்டுவதில் ஏமாற்றி அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் அதற்கு அவர் நீதிமன்றத்தில் அப்பீல் போடுகிறார். இவர் நாட்டு மக்களை காப்பாற்றுபவரா?
நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாயி. அதிமுகவின் கிளை செயலாளராக இருந்து போராடி ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், தலைவர்களிடம் நல்ல பெயர் வாங்கி விசுவாசத்தைக் காட்டி தலைவர்களிடம் அன்பை பெற்று கொள்கை பரப்பு செயலாளராக, அமைச்சராக உருவாகி உயர்ந்த இடத்திற்கு வந்தார். நாம் எல்லோரும் சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து உள்ளோம்.
அவர் திடீரென பொதுச்செயலாளராக வரவில்லை. இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் போராடி உள்ளார். ஆனால் இந்த நடிகரோ சினிமாவில் ஷோ காட்டி விட்டு தானே ஒரு கட்சி ஆரம்பித்து உள்ளார். தற்போது அவரது இரண்டாம் கட்ட தலைவராக உள்ளவர்களில் ஒருவர் நம்மிடம் இருந்தவர்.
எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை கட்சியிலிருந்து பொருளாதாரத்தில் உச்சம் பெற்று விட்டு அதிகாரம் அனைத்தையும் அனுபவித்துவிட்டு அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் எம்எல்ஏ ஆக பதவியும் பிடித்துவிட்டு அங்கே சென்றுள்ளார். அங்கே கொள்கை கோட்பாட்டுக்காக செல்லவில்லை; பதவிக்காக சென்றுள்ளார்.
அந்தக் கட்சியில் லாட்டரி டிக்கெட் விற்கும் கூட்டம் உள்ளது. லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தால் பணம் கொடுப்பதில்லை, பல மாநிலங்களில் இந்த தொழிலை நடத்தி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கையில் உள்ளது. அவர் பல கட்சிகளில் இருந்தார். திருமாவளவன் கட்சியிலும் இருந்தார். அவரை துரத்தி விட்டனர். திமுகவிலும் துரத்தி விட்டனர். நமது கட்சிக்கும் அவர் வர பார்த்தார். நாமும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, தற்போது நடிகர் கட்சிக்கு அவர் சென்றுள்ளார். காசு கொடுத்து பதவியை வாங்குபவர்கள் அந்த கட்சிக்கு செல்கிறார்கள்.
உழைத்து தியாகம் செய்து அந்த தியாகத்தின் அடிப்படையில் வாய்ப்புகளை பெற்று பதவி பொருப்புகளை எடுப்பது அதிமுக. இந்த மூன்றாவது கூட்டம் தலை எடுக்கக் கூடாது. சமூகத்தில் எந்த கஷ்ட நஷ்டங்களுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல், ஏதோ ஒரு மாய தோற்றத்தை வைத்து கொண்டு உயர்ந்த பதவியான முதலமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அவர்களை எந்த சூழ்நிலையிலும் இடம் கொடுக்கக் கூடாது. அதேபோல ஒரு ஆட்சியையே மாற்றியவர் எம்ஜிஆர், அவரை போன்றவர்களை இவருடன் ஒப்பிடக்கூடாது ஒப்பிடுவதற்கு ஒரு தார்மீக உரிமையும் இல்லை" எனக் கடுமையாகப் பேசியுள்ளார் கேபி முனுசாமி.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன











Click it and Unblock the Notifications