கேபி பார்க் ஊழல்.. மாவீரன் வந்து மேலே பார்த்தால் தான் எப்ஐஆர் வருமா? அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் கட்டிடங்களை கட்டிய பிஎஸ்டி எம்பையர் நிறுவனம் மீது எப்ஐஆர் எப்போது போடப்படும் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது. மாவீரன் வந்து மேலே பார்த்தால் தான் எப்ஐஆர் வருமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை, புளியந்தோப்பில் உள்ள கேசவ பிள்ளை பூங்காவில் கடந்த 2016-ம் ஆண்டு 112 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட உயர்மடட் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரசால் கட்டப்பட்டது.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக வீடியோக்கள் வெளியான நிலையில், ஐஐடி நிறுவனத்தின் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் அறிக்கை சமர்பித்தது.
அந்த அறிக்கையில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தை தடைபட்டியலில் சேர்க்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த நிலையில், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை அறப்போர் இயக்கம் தொடர்ந்து வைத்து வருகிறது.

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் இது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட IIT ஆய்வுக்குழு மிக மோசமான தரத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்று தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது.
அதாவது ஒரு மூட்டை சிமெண்டுக்கு 5 மூட்டை மணல் கலப்பதற்கு பதிலாக 15 மூட்டை மணல் கலந்து பூச்சு வேலை செய்துள்ளார்கள். ஆனால் இது வரை இந்த முறைகேடு சம்பந்தமாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த தரமற்ற கட்டிடத்தை கட்டிய PST EMPIRE நிறுவனம் மீது FIR போட்டு விசாரணை நடத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு மேலும் ஒரு அரசு கட்டுமான டெண்டரை வழங்கி திமுக அரசு அழகு பார்த்துள்ளது. ஊழல் ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு எதிராக கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருப்போம்." என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்ப இருந்தது. மேலும் தரம் குறித்து ஐஐடியின் CUBE நிறுவனம் அளித்த முழு ஆய்வு அறிக்கையையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டிருந்தது. மேலும் அப்போது பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள மாவீரன் படம் கேபி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் தரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவீரன் வந்து பார்த்தால் தான் எப்ஐஆர் போடப்படுமா என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications