திமுகவில் இருந்து விலகி வந்தவர்.. கே.பி ராமலிங்கம் தமிழக பாஜக துணைத்தலைவர்.. அண்ணாமலை அறிவிப்பு
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், அக்கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த கே.பி ராமலிங்கம் பாஜக துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம், திமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பற்ற பிரதமரும் முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார். அத்துடன் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் விடுத்த கோரிக்கை அவசியமற்றது என்றும் கூறியிருந்தார். 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் கடந்த 2020ஆம் ஆண்டு நீக்கப்பட்டார் கே.பி ராமலிங்கம். கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கே.பி.ராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். உடனே, அவருக்கு பாஜகவின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கே.பி.ராமலிங்கம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவெ பாஜக மாநிலத் துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ் நரேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, முருகானந்தம், எம்.என். ராஜா, மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சி கவிதாசன் ஆகியோர் உள்ள நிலையில் கே.பி ராமலிங்கத்திற்கும் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications