Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே புண்ணியம்! கோடீஸ்வரனுக்கும் வராத மனசு! ஏழைகள் மருத்துவமனை செல்ல இலவச ஆட்டோ தந்த கேபிஒய் பாலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்ல பணமில்லாமல் தவிக்கும் மக்களுக்கு இலவச ஆட்டோவை நடிகர் பாலா வழங்கியுள்ளார்.

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தவர் பாலா. இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் என பாலாவை சொல்ல முடியாது. ஆனாலும் சொற்ப சம்பளத்தில் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். நலிந்த நடிகர்களுக்கும் உதவி வருகிறார்.

KPY Bala gives free auto to poor people in chennai to reach hospital

இவர் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட போது கூட மைம் கோபிக்கு கிடைத்த எலக்ட்ரானிக் பொருளை பாலாவுக்கு கொடுத்து ஆதரவற்ற இல்லத்திற்கு கொடுக்குமாறு கூறியிருந்தார். அந்த வகையில் பாலா அனைவருக்கும் உதவி வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் அறந்தாங்கி நமது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். இதன் பிறகு ஆகஸ்ட் மாதம் மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து இறக்கிறார்கள் என்பதற்காக மலைவாழ் மக்களுக்காகவே ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

நலிந்த நடிகர்களுக்கும் உதவி வருகிறார். கடந்த ஜூலை மாதம் அறந்தாங்கி நமது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். இதன் பிறகு ஆகஸ்ட் மாதம் மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து இறக்கிறார்கள் என்பதற்காக மலைவாழ் மக்களுக்காகவே ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து மூன்று சோளக்களை கிராமத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை செப்டம்பர் மாதம் வாங்கிக் கொடுத்துள்ளார். அது போல் அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேட்டில் உள்ள உணர்வுகள் அறக்கட்டளைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கேபிஒய் பாலா வழங்கினார். இது அவர் வழங்கிய 4ஆவது ஆம்புலன்ஸ் ஆகும். அது போல் 125 விவசாயிகளுக்கு மண் வெட்டி, கடப்பாறை, விவசாய உபகரணங்களையும் பாலா வழங்கினார்.

இந்த ஆம்புலன்ஸ்களை எல்லாம் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிக் கொடுத்தார். இதற்காக யாரிடமும் பணம் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பாலாவிடம் சொந்தமாக கார் கூட கிடையாது. மிக்ஜாம் புயலால் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அனகாபுத்தூர் பகுதிகளில் 200 குடும்பங்களுக்கு தலா ரூ 1000 என ரூ 2 லட்சத்தை தனது சேமிப்பில் இருந்து அள்ளிக் கொடுத்துள்ளார்.

அது போல் உடல்நலம் குன்றிய ஒரு பெண்ணிற்கு தன்னால் முடிந்தது என கூறி ரூ 1 லட்சத்தை நவம்பர் மாதம் வழங்கியிருந்தார். அது போல் இன்னொருவருக்கு தன்னால் முடிந்த ரூ 30 ஆயிரம் என கூறி வழங்கினார். மேலும் தேவைப்பட்டால் தன்னிடம் கேட்குமாறு தெரிவித்திருந்தார். இப்படியாக கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை பாலா ஆம்புலன்ஸுக்காக ரூ 3 கோடியும், உணவுக்காக ரூ 2 லட்சமும் மற்றவர்களுக்கு செலவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் மேலும் ஒரு உதவியை செய்திருக்கிறார். சென்னையில் மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்ல பணமில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ இலவச ஆட்டோ ஒன்றையும் நடிகர் பாலா வழங்கியுள்ளார். ஆட்டோ உதவி தேவைப்படுவோர் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை 9176878751 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அந்த ஆட்டோவில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் இலவச வாகனம் என எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலா கூறியிருப்பதாவது எனக்கு ஷோக்களை செய்வதன் மூலமும், வெளிநாடுகளில் நிகழ்ச்சி செய்வதன் மூலமும், ஸ்பான்சர்கள் கொடுப்பதன் மூலமும் பணம் கிடைக்கிறது. அதை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். கடவுள் கொடுத்த வாழ்க்கையால் நான் சந்தோஷமாக இருக்கிறேன். என்னால் 4 பேர் சந்தோஷமாக இருந்தால் போதும். இவ்வாறு பாலா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+