இருதயக் கோளாறால் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை.. உயிர் காக்க உதவி செய்யுங்கள்.. ப்ளீஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிறந்து 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான இருதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்தால் தான் இந்த குழந்தை உயிர் பிழைக்கும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் பச்சிளம் குழந்தையின் தந்தையால் பணம் திரட்ட முடியாத காரியம் என்பதால் உங்களால் முடிந்த சிறு உதவியை கூட செய்து பச்சிளம் குழந்தை உயிர் காக்க உதவுங்கள்.. ப்ளீஸ்..
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேவன் ருத்ரப்பா. அவரது மனைவி திருமதி சம்பங்கியம்மா. இந்த தம்பதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.

மூச்சு விடுவதில் சிரமம்
சிறிய கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த மாதேவன் ருத்ரப்பா - சம்பங்கியம்மா தம்பதிக்கு வாழ்க்கையில் கடவுள் கொடுத்த வரம் போல மகள் கிடைத்ததால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். எல்லா பெற்றோரைப் போல தங்கள் மகளின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், நாம் பட்ட கஷ்டத்தை அவள் படக்கூடாது என்று கனவு காண தொடங்கினர்.
வாழ்க்கையில் வசந்தம் வீச தொடங்கிய நிலையில், மகள் பிறந்து சில நாட்களில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பச்சிளம் கைக்குழந்தையாக இருந்த அவர்களது மகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிக்கலான இருதய நோய்
அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வரும் 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பார்த்து பெற்றோர் வேதனை அடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை செய்த எம்.ஐ.ஓ.டி. மருத்துவர்கள், குழந்தைக்கு மிகவும் சிக்கலான இருதய நோய் இருப்பதை கண்டறிந்தனர்.
Unobstructed Supracardiac Total Anomalous Pulmonary Venous Connection (TAPVC) என்ற உயிருக்கு ஆபத்தான பிறவி இதயக் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. குழந்தையின் இதயம் இயல்பான முறையில் இணைக்கப்படவில்லை என்றும், இதை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் அவள் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவை
இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.4,50,000 ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் மாதேவனால் இவ்வளவு பெரிய தொகை திரட்டுவது என்பது இயலாத காரியம் ஆகும். தற்போதைய மருத்துவ பரிசோதனை சிகிச்சைகளுக்காக தங்களால் இயன்ற அளவு கடன் வாங்கி செலவு செய்துவிட்டனர்.

இதனால், மகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோருவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. எல்லா குழந்தைகளைப் போல இந்த பூமியில் சிறகுகள் விரித்து பெரிய உயரத்தை எட்ட வேண்டும் என்றால் மாதேவனின் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம் ஆகும். அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்
எனவே, இந்த பச்சிளம் குழந்தையின் உயிர் காக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறிய தொகை, பெரிய தொகை என்றெல்லாம் இல்லை. நீங்கள் செய்யும் உதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது குழந்தையின் உயிரை காக்க உதவும். எனவே உங்களால் முடிந்த உதவியை உடனே செய்யுங்கள் ப்ளீஸ்..
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications