தேவேந்திர குல வேளாளருக்கு ஏதேனும் பிரச்னை வந்தால் 1996ல் நடந்ததை போல மாறிவிடும்.. கிருஷ்ணசாமி வார்னிங்
சென்னை: அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அருந்ததியினர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும், தேவேந்திர குல வேளாளருக்கு போதிய அளவுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டில் 2009-ல் உள் ஒதுக்கீடு, எந்த சமுதாயத்திற்கு எவ்வளவு இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்கள் (scheduled caste) என்று அழைக்கக்கூடிய 26 சாதிகள் இருக்கின்றன. இதில், தேவேந்திர குல வேளாளர், பறையர், அருந்ததியர் என முக்கிய சமூகத்தினர் இருக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பட்டியலில் சேர்ப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இதில் ஏழு உட்பிரிவு சாதிகளை உள்ளடக்கிய சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இவர்களை இதுவரையில் பட்டியல் சமூக பிரிவிலிருந்து விலக்கு அளிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், கிட்டத்தட்ட 56 துறைகளில் பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை என்பதை கண்டறிந்துள்ளோம். இது குறித்து 6 மாதங்களாக ஆய்வு செய்துஅறிந்தோம்.
கடந்த 2009-ல் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். ஒரு சமூகம் பின்னடைந்து இருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அவர்களுக்கு உதவி செய்வதில் எந்த தவறு இல்லை. ஆனால் எதார்த்தம் என்னவென்றால், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு சிறு துறைகளில் கூட வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
பட்டியலின மக்களுக்கு கொடுக்கப்படும் 18 சதவீதத்தில், அருந்ததியர்களுக்கு கொடுக்கப்படும் 3 சதவீதத்திற்கும் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் தற்போது முன்னுரிமையில் பட்டியலினம் (SC) என்ற இடத்தில் SC(A) என்று ஆகிவிட்டது.எனவே தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதி திராவிட பழங்குடியினருக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அருந்ததியினர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் 2009-ல் உள் ஒதுக்கீடு, எந்த சமுதாயத்திற்கு எவ்வளவு இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிட வேண்டும். அரசு பதவிகளில் அருந்ததியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அதிக அளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கிறது.
பட்டியலின பட்டியலில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினர் எத்தனை பேர் உயர் பதவியில் உள்ளார்கள் என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பட்டியலின மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது.
ஆனால், தற்போது வரை அந்த மக்களுக்குச் சென்றடையாமல் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு நிரப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடுகள் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால் 1996 நடந்ததை போல மாறிவிடும்" இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications