என்னாது சொகுசு பங்களாவா?.. சொந்த வீடு கூட எங்களுக்கு இல்லை.. வாடகை வீடுதான்.. பப்ஜி மதன் மனைவி!
சென்னை: எங்களுக்கு சொந்த வீடு கூட இல்லை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம் என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Recommended Video
3 யூடியூப் சேனல்களை நடத்தி வந்த பப்ஜி மதன், ஆன்லைனில் விளையாடிய போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் தருமபுரிக்கு தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
இவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார். தன் கணவரை தூண்டி விட்டு ஆபாச வார்த்தைகளை பேச வைத்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.

சொகுசு பங்களாக்கள்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் எங்களுக்கு சொகுசு பங்களாக்கள், கார்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்களுக்கு தங்குவதற்கு சொந்தமாக வீடு கூட இல்லை. நாங்கள் இருப்பது வாடகை வீடு.

வாடகை வீட்டில்
சொந்த பங்களா இருந்தால் நாங்கள் ஏன் வாடகை வீட்டில் தங்க வேண்டும்? அது எங்களிடம் ஆடி கார் மட்டும்தான் இருக்கிறது. சொகுசு கார்கள் ஏதும் இல்லை. சொகுசு கார் வாங்கும் அவசியமும் இல்லை. அப்படியிருக்கிறதென்றால் அதற்கு ஆதாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

ஆடி கார்
சொகுசு கார் இல்லாவிட்டால் ஆடி கார் சொகுசு கார் இல்லையா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கிருத்திகா எங்கள் வீட்டு வாசலில் நிறுத்திய கார்கள் எல்லாம் எங்கள் வீட்டு கார் ஆகிவிடமுடியுமா? என்றார்.

கார்களுடன் போட்டோ
அதற்கு நிருபர்கள், நீங்கள்தானே அந்த கார்களுடன் நின்று போட்டோ எடுத்து போட்டுள்ளீர்கள் என்றனர். மேலும் தனது கணவர் மீது பணமோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை என் கணவர் யாரையும் ஏமாற்றியதாக யாரும் புகார் அளிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications