ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி! கே.எஸ்.அழகிரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அது காங்கிரஸ் வென்ற தொகுதி என்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிடுமா காங்கிரஸ் போட்டியிடுமா என விவாதங்கள் நடந்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு திமுக போட்டியிடுமா அல்லது மீண்டும் காங்கிரஸ் கட்சியே களம் காணுமா என விவாதங்கள் நடந்து வந்தன.

காங்கிரஸ் போட்டி
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அது காங்கிரஸ் வென்ற தொகுதி என்று குறிப்பிட்ட அவர் திமுக, மதிமுக, முஸ்லீம் லீக், விசிக, உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

திமுகவினர் ஏமாற்றம்
ஈரோடு கிழக்குத் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த ஈரோடு திமுக பிரமுகர்கள் இதனால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட்டால் அக்கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ் அல்லது தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு வந்த கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சந்திரக்குமார் ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

யார் வேட்பாளர்
இதனிடையே ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் யாரை வேட்பாளராக களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இடைத்தேர்தலானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications