காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டிப் பூசல் புதிதல்ல! தலைமைக்கும் அது தெரியும்! கே.எஸ்.அழகிரி ஓபன் டாக்!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டிப் பூசல் ஒன்றும் புதிதல்ல என்றும் இதனால் கோஷ்டிகள் கூறும் புகார்களை வைத்தெல்லாம் தலைமை எந்த முடிவும் எடுக்காது எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
டெல்லி புறப்பட்ட சோனியா: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி இதனைக் கூறினார். தன்னை பொறுத்தவரை கோஷ்டிகளில் பெரிதாக எந்த நம்பிகையும் இல்லை என்றும் இன்று ஒன்று பேசுபவர் நாளை ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுபவர் நேற்று ஒன்று பேசியிருப்பார் இதனால் கோஷ்டிகள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றார்.

பாஜக வளர்ந்துவிட்டதா? : தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து விட்டதாக பாஜகவினரே சொல்வதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சில நண்பர்கள் தான் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என கூறுகிறார்கள் என்றும் அதற்கான காரணம் தமக்கு புரியவில்லை எனவும் கூறினார். நேற்றைய தினம் ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சோனியா காந்தியிடம் நேரடியாக கே.எஸ்.அழகிரி பற்றி முறையிட்டார்.
இளங்கோவன் மீது பாய்ச்சல்: அத்தோடு விடாமல் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்றும் இதனை நாம் ஒப்புக் கொண்டுத் தான் ஆக வேண்டும் எனவும் பேசியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் இளங்கோவன் பெயரை குறிப்பிடாமல் தனது மொத்தக் கோபத்தையும் கொட்டித்தீர்த்திருக்கிறார் அழகிரி. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பதாக கூறுவது விசித்திரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
குழந்தைத் தலைவர்: செய்தியாளர்கள் சந்திப்பின் போது மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனே இப்படிச் சொல்லியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இருக்கட்டும் யாராக இருந்தால் என்ன மூத்த தலைவரோ, குழந்தை தலைவரோ யார் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இளங்கோவனை கலாய்த்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து கே.எஸ். அழகிரியை மாற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமையை பொறுத்தவரை கோஷ்டிப்பூசலை முழுமையாக அறிந்து வைத்திருப்பதால் எடுத்தோம், கவிழ்த்தோம் என எந்த முடிவையும் எடுத்துவிடாது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications