அதிமுக-திமுக இணைப்பை எம்ஜிஆர் விரும்பினாரா? துரைமுருகன் கருத்துக்கு கேஎஸ் ராதாகிருஷ்ணன் மறுப்பு!
சென்னை: அண்ணா திமுகவை தமது இறுதிக் காலத்தில் திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பியதாக திமுக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்தை மூத்த வழக்கறிஞரும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக அமைச்சர் துரைமுருகன் "எம்ஜிஆர் தனது கடைசி காலத்தில் திமுகவில் இணைய விரும்பினார் இன்னும் ஒரு நாள் இறக்காமல் தாமதித்து இருந்தால் திமுகவில் இணைந்து இருப்பார்" என்று பேட்டியில் கூறியிருந்தார்.

அதிமுக- திமுக இணைப்பும் பிஜூ பட்நாயக் மேற்கொண்ட முயற்சியும்
எனக்குத் தெரிய இப்படியான சம்பவங்கள் எப்போது நடந்தது என்றால் ஒடிஷாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் தமிழ்நாட்டிற்கு வந்து திமுக-அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இணைய சமாதானம் பேச வந்த போது நடந்தது. முதல்வர் எம்ஜிஆர்- கலைஞரை அழைத்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் பிஜு பட்நாயக் இருவரையும் சந்தித்தது பேச வைத்தார். இருந்த முதலமைச்சராக இருந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்தித்து திமுகவும் - அதிமுகவும் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை வந்து கருணாநிதியுடன் பேசினார், பின்னர் கருணாநிதியும் எம்.ஜி.ராமச்சந்திரனும் சந்தித்து பேசினார்கள். வெற்றிகரமாக நடந்து முடிந்தது பேச்சுவார்த்தை.
பிஜூ பட்நாயக் முயற்சி ஏன்?
ஆனால் இணைப்பு சாத்தியமாகவில்லை இதுப்பற்றி நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார் கருணாநிதி. பின்னர் ஒருமுறை, பண்ருட்டி இராமச்சந்திரன் தான் திமுக - அதிமுக இணைப்பை தடுத்தார் என பகிரங்கமாக பேசினார். பிராந்திய கட்சிகள் வலிமையாக இருந்தால் தான் தேசிய கட்சிகளை எதிர்க்க முடியும், மாநில நலனை காக்க முடியும் என்ற கருத்தை உடையவர். அதனாலே திமுக - அதிமுக இணைய முயற்சி செய்தார். பின், எம்ஜிஆர் இணைப்பை விரும்பவில்லை. அப்போது ஜெயலலிதாஅரசியல் களத்தில் இல்லாத நேரம்.
எம்ஜிஆர் மறைவு நாளில் கருணாநிதி
எம்ஜிஆர் மறைவு அன்று கருணாநிதி ஈரோடு கூட்டத்தில் கலந்து விட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பினார். அன்றைக்கு மாவட்டச் செயலாளர் டி ஆர் பாலுவோடு சென்டரல் ரயில்வே நிலையத்லிருந்து ராமாபுரம் தோட்டத்தில் சென்று அதிகாலையில் எம்ஜிஆருக்கு கருணாநிதி, அஞ்சலியை செலுத்திய போதும் சலசலப்பு ஏற்பட்டது.
வேடிக்கை பார்த்த கருணாநிதி
பின்னர் ஆளுநர் சுந்தர் லால் குரானா முன்னிலையில்,முதல்வர் பதவியை ஏற்ற ஜானகி அம்மையாருக்கு பிரச்சனைகள் இருந்தது. ஆர் எம் வீரப்பன் ஆலோசனையின் பேரில் தேர்தல் கூட்டணிக்கு என பலரின் ஆதரவுக் கரங்கள் வேண்டி காங்கிரஸ, திமுக என ஜானகி அம்மாள் எல்லோரிடம் தூது போய்க் கொண்டிருந்தார். கருணாநிதியிடம் ஆதரவு கேட்டு கோபாலபுரம் வீட்டுக்கே வந்தார். உண்மையில் அந்த இக்கட்டுகளை கருணாநிதி தந்திரமாக வேடிக்கைதான் பார்த்தார்!
திமுகவுடன் இணைவதை நிராகரித்த எம்ஜிஆர்- ஏன்?
அது ஒரு புறம் இருக்க திமுகவுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை எம்ஜிஆர் அவர் உயிரோடு இருக்கும் போதே மறுத்துவிட்டார் என்பது தான் இங்கு முக்கியம்! காரணம் ஈழப்பிரச்சனகளின் போது திமுக தலைமை மீது குறிப்பாக கருணாநிதி மீதும் எம்ஜிஆர் கடும் கோபத்தில் இருந்தார் . அவர் கையாண்ட எதுவும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இல்லை என்கிற நிலைப்பாடு அவரிடம் இருந்தது. குட்டிமணி ஜெகன் போன்றோர் கைது செய்யப்பட்ட போது எம்ஜிஆர் சங்கடம் அடைந்தார். கடைசி காலத்தில் எம்ஜிஆர் பேசிய பேச்சுகளும் அவர் தொடர்ந்து உரையாற்றியது பேட்டி கொடுத்ததெல்லாம் பார்த்தால் இந்த விஷயங்கள் நன்றாகப் புரியும். அதை ஒட்டி ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மீதும் கடுமையான கோபத்தில் எம்ஜிஆர் இருந்தார்! இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஈழப் பிரச்சினையின் போது நாங்கள் எம்ஜிஆர் உடன் அதிகம் தொடர்பில் இருந்தோம். இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications