சீமான் ஏன் எங்களை ஆதரிக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.. சீரியசாக எடுக்க வேண்டாம்.. அண்ணாமலை பளீர்
சென்னை: சீமான் ஏன் பாஜகவை ஆதரிக்கிறார் என அனைவருக்கும் தெரியும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கேடி ராகவனின் வீடியோ சர்ச்சை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் சீமான் கருத்து தெரிவித்து இருந்தார். கேடி ராகவனின் பாலியல் ரீதியான வீடியோ சர்ச்சையான நிலையில், ராகவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார்.
சீமான் இது தொடர்பாக அளித்த பேட்டியில், கேடி ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று. தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதுதான் சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்.

குற்றம்
இதெல்லாம் ஒரு சமூக குற்றமா? உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் பிடிப்பது குற்றம். அந்த வீடியோவை வெளியே விடுவதும் குற்றம். அவருடைய அனுமதி இல்லை வீடியோ எடுப்பது தவறு. அவருடைய படுக்கை அறைக்கு, கழிவறைக்கு சென்று வீடியோ எடுப்பது எப்படி சரியாகும்.

கேள்வி
என்ன நடக்கிறது? வீடியோ எடுத்து அதை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபைக்கு உள்ளே ஆபாச காட்சிகளை பார்ப்பது தவறு. அப்படி ஏதாவது நடந்தால் தவறு. நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் செய்ததை ரெக்கார்ட் செய்து வெளியிடுவது தவறு, என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.
Recommended Video

அண்ணாமலை
இந்த நிலையில் சீமான் ஏன் பாஜகவையும் கேடி ராகவனையும் ஆதரிக்கிறார் என்று செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார்கள். சீமான் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, சீமான் ஏன் கேடி ராகவனையும், பாஜகவையும் ஆதரிக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். சீமான் பேச்சை சீரியஸாக்க வேண்டாம்.

அண்ணாமலை சீமான்
சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவர் பேட்டியை நான் கேட்பேன், நகைச்சுவையை ரசித்துக்கொள்வேன். கடந்து செல்வேன். சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும் என்று அண்ணாமலை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications