சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதா? கோபித்துக் கொண்டு வெளியேறிய குமரவேல் குமுறல்

Google Oneindia Tamil News

Recommended Video

    மநீமவிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய குமரவேல் குமுறல்

    சென்னை: கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என சி.கே. குமரவேல் தெரிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல் ராஜினாமா செய்துவிட்டார்.

    இந்த நிலையில் அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாற்று அரசியலுக்காக மக்கள் மநீதி மய்யத்தில் இணைந்தேன். ஆனால் மநீமவில் கூட அப்படியேதான் இருக்கிறது.

    அதிமுகவில் சீட் இல்லை.. திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார் மாஜி அமைச்சர் ராஜகண்ணப்பன்அதிமுகவில் சீட் இல்லை.. திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார் மாஜி அமைச்சர் ராஜகண்ணப்பன்

    முழு நேர அரசியல்வாதி

    முழு நேர அரசியல்வாதி

    ஓராண்டாக மக்கள் நீதி மய்யத்தில் உள்ளேன். என்னிடம் கமலின் செல்போன் எண் கூட கிடையாது. கட்சியின் செயல் ஒரு விதமாகவும் களநிலவரம் ஒரு விதமாகவும் இருக்கிறது. முழு நேர அரசியல்வாதியாக கமல் செயல்படவில்லை.

    கமல் பயணம்

    கமல் பயணம்

    அரசியல், சினிமா இரு பாதையில் கமல் பயணம் செய்கிறார். கமலின் நம்பகத்தன்மையை வைத்துதான் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது. கடலூர் தொகுதியில் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்பதால் நான் போட்டியிட விரும்பினேன்.

    புதிய பதவி

    புதிய பதவி

    நேர்காணலுக்கும் சென்றேன். நேர்காணலில் நான் பங்கேற்கவில்லை என கூறுவது தவறு. கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது போல் அவர் கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில் செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதையும் ஏற்க முடியாது.

    இணைந்தது

    இணைந்தது

    கமலை சூழ்ந்திருப்பவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்கள். பாதியில் வந்தவர்களால் கட்சி வேறு பாதையில் பயணக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு உதாரணம் கட்சியில் மகேந்திரன் இணைந்ததுதான் என்றார் குமரவேல்.

    English summary
    C.K. Kumaravel says that he will not accept Kovai Sarala interviewing candidates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X