Abirami: கோயம்பேட்டில் ட்விஸ்ட்! டூவிலரை பார்க் செய்த பிரியாணி அபிராமி! 2018ல் நடந்தது என்ன?
சென்னை: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம். மேலும் வழக்கில் நடந்த முக்கிய திருப்பங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை குன்றத்தூரில் உள்ள விஜய் எனும் தனியார் வங்கி ஊழியரின் மனைவிதான் அபிராமி. இவர்களுக்கு அஜய் (7), கார்னிகா (4) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். விஜய், தனது மனைவி, குழந்தைகளை அவ்வப்போது வெளியே அழைத்துச் செல்வது வழக்கம்.

அந்த வகையில் அவர்கள் அடிக்கடி வீட்டருகே இருக்கும் உணவகத்திற்கு சென்று பிரியாணி சாப்பிடுவது வழக்கமாம். இங்கு பிரியாணி பிடித்து போனதால், கணவர் இல்லாத நேரத்திலும் அபிராமி, கடைக்கு போன் செய்து ஆர்டர் செய்வாராம்.
அந்த பிரியாணியை அபிராமி வீட்டிற்கு டோர் டெலிவரி செய்வது சுந்தரம் என்பவராம். இதனால் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டதால் நெருக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் அபிராமி வீட்டிற்கு தெரிந்து அவர்கள் அபிராமிக்கு, குழந்தைகளை காட்டி அறிவுரை கூறினராம். இதனால் குழந்தைகளை கொன்றுவிட முடிவு செய்து, அவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொண்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் கைதான அபிராமிக்கு இன்று காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
செப்டம்பர் 1,2018: குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜய், தனது மனைவி அபிராமி, குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டதாக புகார் அளித்தார்.
செப்டம்பர் 2, 2018: நாகர்கோவிலில் வைத்து குன்றத்தூர் அபிராமி கைது
செப்டம்பர் 26, 2018: சிறையில் அபிராமி சரியாக சாப்பிடாமல் அழுதபடியே இருந்தார். அவர் மயங்கியும் விழுந்ததாக செய்திகள் வந்தன
அக்டோபர் 7,2018: புழல் சிறையில் மனவேதனையில் இருந்த அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்தன
டிசம்பர் 20, 2018: அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
டிசம்பர் 21, 2018: அபிராமிக்கு எதிரான குற்றப்பத்திரிகை 200 பக்கங்களுடன் தாக்கல் செய்யப்பட்டது
ஜூலை 24, 2025: இந்த வழக்கில் காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அபிராமியும் சுந்தரமும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications