குன்றத்தூர் அபிராமி பெற்ற குழந்தை மீது ஏறி அமர்ந்து.. இந்த 2025ல் நீதிபதி தந்த மறக்க முடியாத தண்டனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதுமே கள்ளக்காதல்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆனால் கள்ளக்காதல் என்றாலே தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருபவர் குன்றத்தூர் அபிராமிதான்.. 2018ல் இந்த பெண் செய்த துணிச்சல் காரியத்தின் அதிர்ச்சி இன்னும் நம் மக்களுக்கு போகவில்லை.. இந்த வருடம்தான் அபிராமிக்கு நீதிமன்றம் தண்டனை தந்தது. இந்த 2025-ல் நீதிமன்றங்கள் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பை தந்திருந்தாலும், அபிராமிக்கு தந்த தண்டனையை யாராலும் மறக்க முடியாது.

கடந்த 2018ல் சென்னை குன்றத்தூர் பகுதியில் வசித்து வரும் விஜய் என்பவரின் மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

Kundrathur Abirami Biryani abhirami chennai

அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை பார்த்த மீனாட்சி சுந்தரம் என்கிற சுந்தரம் என்பவருடன் நட்பு அபிராமிக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இதை கணவர் கண்டித்தும் அபிராமி கேட்கவில்லை. ஒருகட்டத்தில் சுந்தரத்துடன் வாழ தயாரானார்.

மென்சோவிட்டப் பிளஸ்

கணவரும், பிள்ளைகளும் இருக்கும்வரை நிம்மதியாகவே வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தது இந்த கள்ளக்காதல் ஜோடி வந்தது... அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று முதலில் ஐடியா தந்தது சுந்தரம்தான்..

வயிற்றில் கரு உருவாகாமல் தடுக்கும் மென்சோவிட்டப் பிளஸ் என்ற மாத்திரை, தூக்க மாத்திரை இரண்டையுமே அபிராமியிடம் வாங்கி தந்திருக்கிறார்.. கணவருக்கும், 2 குழந்தைகளுக்கும் அதை பாலில் கலந்து தந்துள்ளார் அபிராமி.. இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். ஆனால் ஒரு குழந்தை இறந்துவிட்டது.. இன்னொரு குழந்தை சாகவில்லை என்பதால், குழந்தையின் நெஞ்சு மீது ஏறி உட்கார்ந்து, குழந்தையின் தொண்டையை பிடித்து நெரித்து, பிறகு தொண்டையை மிதித்தே கொன்றுவிட்டார் அபிராமி

கோயம்பேட்டில் அபிராமி

பிறகு விஜய் இதுகுறித்து போலீசில் புகார் தந்துள்ளார்.. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்த நிலையில் கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் அபிராமியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், அபிராமிக்கு தண்டனை தாமதமாகி கொண்டே போனது.. சிறையிலடைக்கப்பட்ட அபிராமி, ஆரம்பத்தில் ஜெயிலில் யாருடனும் பேசாமல் இருந்தாராம்.. நிறைய மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு, உடல்நலமும் பாதிக்கப்பட்டதாம்.. எனினும், சிறையிலேயே அவருக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளது. இதற்கு பிறகே அபிராமி இயல்பு நிலைமைக்கு வந்துள்ளார்.

சாப்பிடாமல் வந்த நீதிபதி

கடந்த ஜூன் மாதம் அதாவது சிறையில் அடைக்கப்ட்ட 8 வருடங்களுக்கு பிறகு அபிராமிக்கு தண்டனை வழங்கப்பட்டது.. தீர்ப்பை வாசிக்கும் முன்பு, அபிராமியும், சுந்தரமும் முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து, முகத்தை மறைத்திருந்தனர்.. உடனே நீதிபதி இருவரையும் பார்த்து, இப்படி முகத்தை மூடிக்கொண்டு நின்றால், எப்படி அடையாளம் காண முடியும்? என்று போலீசாரை பார்த்து கோபத்துடன் கேட்டார்..

அப்போது வழக்கு குறித்து பேசிய நீதிபதி, சாப்பிட்டுவிட்டு 1 மணி நேரம் கழித்து தண்டனையை அறிவிப்பதாக சொன்னார்.. ஆனால், அடுத்த நிமிடமே திரும்பி வந்துவிட்டார்.. 'இப்படியான குற்றவாளிகளுக்கு தண்டனையை அறிவிக்காமல், எப்படி என்னால் சாப்பிட முடியும்? தண்டனை விவரங்களை சொன்ன பிறகு சாப்பிடுவதாக சொல்லிவிட்டு தண்டனையை அறிவித்தார்.

பிள்ளை பாக்கியம்

அதில், "உங்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.. ஆனால், இது காந்தி தேசம் என்பதால், பழிக்கு பழியாக தண்டனையை வழங்க முடியாது..ஆனால், நீங்கள் இருவரும் செய்திருக்க கூடிய குற்றம் கொடூரமானது.. காம இச்சைக்கு குழந்தைகளை கொன்றதை ஏற்க முடியாது..

கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கும்போது, குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது.. எனவே அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன். மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறி நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.

கதறி அழுத அபிராமி

இந்த தீர்ப்பை கேட்டு அபிராமி கதறி அழுதார்.. தன்னுடைய அப்பா, அம்மா வயதானவர்கள். ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன். எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டும் அதை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை.

அபிராமிக்கு தூக்கு தண்டனையே தர வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து கூறினார்கள்.. எனினும், கள்ளக்காதல் வெறியால் உலகமறியா பச்சிளம் குழந்தைகளை கொல்வதை தடுக்க, இதுபோன்ற செயல்களுக்கு ஒரு கடுமையான பாடமாகவும், எச்சரிக்கையாகவும் இந்த தீர்ப்பு அமைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+