நிறுவன நாளும் அதுவுமாக.. பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பு.. பதறிப்போன தொண்டர்கள்
சென்னை: பாஜக ஸ்தாபன நாளையொட்டி இன்று சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் கொடியை தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஏற்றினார். அப்போது பாஜக கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. இதையடுத்து அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் ஸ்தாபன நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி அலுவலகங்களில் பாஜக தலைவர்கள் கட்சி கொடி ஏற்றி வருகின்றனர்.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பாஜக ஸ்தாபன நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பு
இதன் ஒருபகுதியாக சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பாஜக கொடியை ஏற்றினார். அப்போது அவர் பாஜக கொடியை தலைகீழாக ஏற்றினார். இதையடுத்து குஷ்பு அங்கிருந்து சென்ற நிலையில் கொடியை கீழ் இறக்கிய நிர்வாகிகள் அதை சரிசெய்து மீண்டும் நேராக ஏற்றினர். முன்னதாக குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெருமையா இருக்கு...
பாஜக தொண்டராக கொடியேற்றுவது பெருமையாக உள்ளது. கட்சி துவங்கியது முதல் இன்று வரை மக்கள் பாஜக மீது நம்பிக்கையுடன் உள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக கொடி இருக்கிறது. ஏதாவது வேலை செய்வதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதால் திமுகவினர் ஆளுனருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.

கஷ்டமான விஷயம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு கஷ்டமான விசயம்தான், ஆனால் உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உயர்கிறது. கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும்போது விலையை உயர்த்த கூடாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால் உக்ரைன்-ரஷ்யா போரால் கச்சஎண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதுதான் விலை உயர்வுக்கு காரணம். இந்தியாவில் மட்டும் விலை உயரவில்லை. அனைத்து நாடுகளிலும் விலை அதிகரித்து வருகிறது.

மார்ச் 8 ல் ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது, இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஆளுங்கட்சியாக இருப்பதால் காவல்துறை திமுகவிற்கு சாதகமாக உள்ளது. தமிழக அரசு சொத்து வரியை 150 விழுக்காடு உயர்த்தியது தவறு. மார்ச் 8ல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்

பாடம் புகட்டுவோம்
திமுக மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி தங்களது திட்டங்களாக கூறி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால் நல்லது நடந்தால் அதை தங்களது திட்டம் என்று கூறிக்கொள்கின்றனர் , ஆனால் சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசை காரணம் சொல்கின்றனர். திமுக தலைமையில் அமைந்த புதிய அரசின் 6 மாத தேனிலவு காலம் முடிந்துவிட்டது. இனி திமுகவிற்கு, பாஜக பாடம் புகட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!












Click it and Unblock the Notifications