2021-இல் தமிழக சட்டசபையில் பாஜகவினர் இடம்பெறுவர்.. புதிய தலைவர் எல் முருகன் உறுதி
சென்னை: 2021-இல் தமிழக சட்டசபையில் பாஜகவினர் இருப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்கள் கழித்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவராக எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாமக்கல்லை சேர்ந்தவர். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.

இவர் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் புதிய தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவை எம்பி இல கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது எல் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் என்னை மாநிலத் தலைவராக நியமனம் செய்த நட்டா, அமித்ஷா, மோடி, அனைத்து பாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி.

பத்திரிகை நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பிரதான கட்சியாக பாஜகவை கொண்டு செல்ல உள்ளோம்.
அனைத்து மக்களிடமும் கட்சியை கொண்டு செல்வோம். நாங்கள் நேர்மையான அரசியலை செய்து வருகிறோம் என்றார். ரஜினியை பயன்படுத்திக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். பாஜகவில் இருந்தால் சாதாரண தொண்டரும் மிகப் பெரிய தலைவராக முடியும். வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.

இதுதான் எனது இலக்கு. தமிழக மக்கள் சார்ந்த விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.
-
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications