செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை நெனச்சவுடனே திறக்க மெக்கானிக் ஷாப் இல்லீங்க.. எல் முருகன்
சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் மெக்கானிக் ஷாப் அல்ல, எப்போது தொடங்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் மூத்த தலைவர் கே என்.லட்சுமணன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில தலைவர் எல் முருகன், மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், பாஜக மூத்த தலைவர் இல கணேசன், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவன் விநாயகம், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால்கனகராஜ், பாஜக மாநில அலுவலக செயலாளர் சந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

7 ஆண்டுகள்
பின்பு செய்தியாளரிடம் பேசிய மாநிலத் தலைவர் முருகன் பேசுகையில் பாரதப் பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. அந்த நிலையில்தான் கொரோனா முதல் அலை தாக்கம் ஏற்பட்டது.

கையாண்டு
அது சிறப்பான முறையில் கையாண்டு கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் கொரோனாவின் இரண்டாம் அலையும் தற்போது பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. மேலும் தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகம்
கடந்த மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டன. இதேபோல் இந்த மாதத்திற்கு இரட்டிப்பாக வழங்கப்படும். குறிப்பாக ஓரிரு நாட்களில் மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தை வந்தடையும். தடுப்பூசி வழங்குவது மாநிலத்தின் மக்கள் தொகை, அங்கு உள்ள பாதிப்பு சதவீதம், தடுப்பூசி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது.

அதிகளவு
தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு வீணாக்கப்படுகிறது. மத்திய அரசு முதல்முறையாக ராணுவ விமானங்கள், சிறப்பு ரயில்கள் ரயில்களை மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்ல நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பணியை பயன்படுத்தியது.

தடுப்பூசி செலுத்த தயக்கம்
மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின்தான். அதன் காரணமாகவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்து கொண்டிருக்கின்றனர்.

அறிவியல்
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் ஷாப் கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்கள் அதை ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும். தேவைப்பட்டால் மத்திய அரசு ஏற்று நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றார். மேலும் சசிகலா ஆடியோ குறித்து கேட்ட போது அது அதிமுகவின் உள்கட்சி விவகாரம், அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications