சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இசை உலகின் கதாநாயகன்.. லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் மறைவுக்கு .ஸ்டாலின் இரங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர் ராமன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இசைக் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தி புகழ்பெற்ற நிறுவனமான லக்‌ஷ்மன் ஸ்ருதி சென்னை அசோக் நகரில் செயல்படுகிறது. இதன் உரிமையாளர்கள் லக்‌ஷ்மன் மற்றும் ராமன் சகோதரர்கள் ஆவர்.

 lakshman sruthi owner raman suicide : mk stalin condolences

இதில் ராமன் நேற்று பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் ராமன் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது.

இந்நிலையில் லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் "இசையுலகின் கதாநாயகனாகத் திகழ்ந்து, மக்கள் மனம் கவர்ந்த லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர் ராமன் எதிர்பாராத மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது திடீர் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசை ரசிகர்களை மீளா அதிர்ச்சியிலும், தாங்க முடியாத வேதனையிலும் ஆழ்த்தியுள்ள அவரது மரணம் இசை உலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.

போலீஸார் வீடு புகுந்து பொருட்களை உடைத்து, நகை பணத்தை பறித்தனர்.. முசாபர்நகர் முஸ்லீம் குடும்பங்கள்போலீஸார் வீடு புகுந்து பொருட்களை உடைத்து, நகை பணத்தை பறித்தனர்.. முசாபர்நகர் முஸ்லீம் குடும்பங்கள்

மேடை கச்சேரிகளில் தனி முத்திரை பதித்த அவர், 10,000 த்திற்கும் மேற்பட்ட இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். 1987 இல் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட "லட்சுமன் ஸ்ருதி" தமிழகம் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் தமிழ் இசைக்காக ஆற்றிய தனித்துவமிக்க சேவை, மனதை குளிர்விக்கும் கச்சேரிகள் உலக அளவில் உள்ள ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது .

'எத்தனையோ கழக நிகழ்ச்சிகளுக்கு துணை புரிந்த லக்ஷ்மன் ஸ்ருதி திரு.ராமன் அவர்களின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் பேரியக்கங்களுக்கும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

English summary
dmk leader mk stalin condolences lakshman sruthi owner raman suicide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X