பாலியல் புகாரில் சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி... ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி ட்விட்டரில் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் தொல்லை புகார் குறித்து அப்பள்ளியில் டிரஸ்டிகளில் ஒருவரான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளான பாஜாவின் மதுவந்தினி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    Madhuvanthi விளக்கம்! PSBB School Controversy |Rajagopalan | Oneindia Tamil

    சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிபவர் ராஜகோபால். இவர் மீது மாணவிகள் ஏராளமான பாலியல் புகார்களை தெரிவித்திருந்தனர்.

    ஆன்லைனிலும் பாலியல் சேட்டை

    ஆன்லைனிலும் பாலியல் சேட்டை

    ஆனால் பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவே இல்லை என்பது முன்னாள் மாணவர்கள் குற்றச்சாட்டு. மேலும் ஆன்லைன் வகுப்புகளிலும் பாலியல் சேட்டைகளை ராஜகோபால் வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

    விவகாரம் விஸ்வரூபம்

    விவகாரம் விஸ்வரூபம்

    சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்காகி வருகிறது பத்மசேஷாத்ரி பள்ளி விவகாரம். மேலும் சென்னை கே.கே.நகர் போலீசாரும் இன்று விசாரணை நடத்தினர். அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதி அளித்துள்ளார்.

    ஒய்.ஜி. மகேந்திரன் கடிதம்

    ஒய்.ஜி. மகேந்திரன் கடிதம்

    இந்நிலையில் இப்புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்மசேஷாத்ரி பள்ளியின் டிரஸ்டிகளில் ஒருவரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இ மெயில் மூலம் பள்ளி நிர்வாகத்தை கேட்டிருந்தார். இந்த மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    மதுவந்தி விளக்கம்

    மதுவந்தி விளக்கம்

    இதனைத் தொடர்ந்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியும் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளி அறக்கட்டளை உறுப்பினராக எனது தந்தை ஒய்.ஜி. மகேந்திரன் அவர்கள், தேவையான நடவடிக்கை எடுக்க மின்னஞ்சல் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகம் PSBBயில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு விடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல், இது போன்ற குற்றங்கள் இழைத்தவர்களை தகுந்த தண்டனை பெற்றுத்தர பள்ளி நிர்வாகத்துக்கு உறுதுணையாக நின்று மேலும் இது போன்ற குற்றங்கள் ஏற்பட (ஏற்படா) வண்ணம் நடவடிக்கை எடுக்க கோறுவோம் (கோருவோம்) என பதிவிட்டுள்ளார் மதுவந்தி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+