மோசடி புகார்...திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வழக்கு...சிபிசிஐடி நடவடிக்கைக்கு இடைக்கால தடை!!
சென்னை: மோசடி புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் மீது சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இணை அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். தற்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்.. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வாங்கினேன்.

அந்த நிறுவனம் தனக்கு உரிமையானது என்று குவிட்டன்தாசன் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013 ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மீண்டும் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய விலக்கு அளிக்க வேண்டும்'' என்று கோரி இருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் உள் நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார் வரும் 24ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் இது குறித்து சிபிசிஐடி போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் இறுதி விசாரணை வரும் 31-ஆம் தேதி நடத்தப்படும் என்றும், அது வரை இந்த வழக்கு தொடர்பாக ஜெகத்ரட்சகன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதே புகார் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications