வில்லங்க சான்றை விடுங்க.. குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்.. நிலம், குடியிருப்பின் விலை உயர்வு?
சென்னை: தமிழகத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பதிவுத் துறைதலைவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மாவட்டபதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரஅடியிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவாக உள்ளன.
வழிகாட்டி மதிப்பு: வங்கிகள் வழிகாட்டி மதிப்பையொட்டியே கடன் வழங்கும். இதனால் மனை நிலம் வாங்குவோர் வங்கிகளில் தேவையான அளவுக்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதைத் தவிர்க்கவும் வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயிக்கவும் ஆக.16-ம் தேதி மைய மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதத்துக்குப்பின் குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பை பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.1000, ஆவடி, தாம்பரம், ஓசூர் மற்றம் காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.800, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.700, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கரூர் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.600, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.500, கடலூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள்: மேலும், நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மனைகளுக்கு சதுரஅடி ரூ.300, அனைத்து பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு சதுரஅடி ரூ.200 என்று நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் மற்றும் இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.100-ம், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகள்: அதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.50, விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ரூ.2 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டமதிப்புகள் இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குறைந்தபட்ச மதிப்புக்கு கீழ் வேறு மதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
பதிவுக்கட்டணம்: ஏற்கெனவே, பதிவுக்கட்டணம் உயர்ந்துள்ளது.. இதனால், வீடு, நிலம் வாங்குவோருக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டு வருகிறது.. பிறகு, அடுக்குமாடி கட்டிடம் வாங்குவோருக்கான பதிவு விதிகளில் திருத்தம் செய்து, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவோர் அதன் முழு பரப்புக்கும் கணக்கிட்டு அதனைப் பொறுத்து 9 சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அடுத்த அறிவிப்பு வெளியானது.
இதனால், வீடு வாங்குவோர், ரியல் எஸ்டேட் தரப்பினர் அதிர்ந்துபோனதுடன், இந்த அறிவிப்புகளை ரத்து செய்து, மீண்டும் பழைய நிலையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோரிக்கை: இப்படிப்பட்ட சூழலில், குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்துள்ளதால், மனைகளின் சந்தை மதிப்பு உயருவதுடன், நிலம் மற்றும் குடியிருப்புகளின் விலையும் உயரும் என்ற அச்சம் பொதுமக்களிடம் படர்ந்து வருகிறது. எனவே, புல எண்கள் அடிப்படையில் அவற்றுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications