நிலத்தை வாங்கியோர் ஹேப்பி.. ஒரேநாளில் பத்திரப்பதிவு சபாஷ்.. ரூ.237.98 கோடி வருவாய்.. செம பதிவுத்துறை
சென்னை: முகூர்த்த நாளான நேற்று ஒரேநாளில் ஆவணப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து, தமிழக பதிவுத்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு, அதில் வருவாய் குறித்த தகவலை கூறியிருக்கிறது.
தமிழக பதிவுத்துறையை பொறுத்தவரை, வருவாய் இலக்கை நிர்ணயித்து, அதன்படி செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும், இலக்கு நிர்ணயித்து, அதை அடையுவும் முயற்சியை இப்போதே கையில் எடுத்து வருகிறது.

இதற்காகவே, பொதுமக்களுக்கு ஏராளமான அதிரடிகளையும், அறிவிப்புகளையும் பதிவுத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு, விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவணப்பதிவு: மேலும், கடந்த ஆண்டைபோலவே இந்தாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், பொது மக்களின் நலன் கருதி, அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான தைப்பூச திருநாளான இன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே இன்று பத்திரப்பதிவு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.
முகூர்த்த நாள்: இந்நிலையில், முகூர்த்த நாளான நேற்று ஒரேநாளில் ஆவணப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து, பதிவுத்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"மங்களகரமான நாளான பிப்.10ம் தேதி திங்கள்கிழமை அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
கோரிக்கைகள்: பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
2024-25 ம் நிதியாண்டில் கடந்த டிச.5ம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட முன்பதிவு வில்லைகளை பொதுமக்கள் பயன்படுத்தியதன் மூலம் பிப்.10ம் தேதியன்று 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதே நிதியாண்டில் இண்டாவது முறையாக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளளது.
பதிவுத்துறை: இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த டிசம்பர் மாதம் 238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது 237,98 கோடி, அதாவது 2 சதவீதம் குறைந்திருப்பதாகவே தெரிகிறது.. ஏனென்றால், கடந்த 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அறிவுரை வழங்கியிருந்தும், தமிழகத்தில் மூன்று பதிவுத்துறை அலுவலகங்களை தவிர, வேறு எங்கும் பதிவு நடக்கவில்லை. எல்லா பதிவு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன..
விரைவில் சாதனை: இதற்கு, சார்-பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை அலுவலர்களின் கருத்தைக் கேட்காமல் உயர்அதிகாரிகள் தாங்களே முடிவெடுத்து அறிவித்ததால், இத்தகைய குழப்பம் ஏற்பட்டதாக அலுவலர்கள் கூட்டமைப்பு காரணமும் கூறியிருந்தது. ஒருவேளை, இதுபோன்ற குளறுபடிகளால், வருவாய் குறைந்திருப்பதாகவே கருதப்படுகிறது. எனினும், இந்த குளறுபடிகளை களைந்து, வரும்நாட்களில் பதிவுத்துறை சிறப்பாக செயல்பட்டு, கடந்த வருடம் எட்டிய இலக்கை, இந்த வருடம் எளிதாக முறியடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications