ஆன்லைனில் ஆதார் – பட்டா இணைப்பது எப்படி? நிலம் வாங்குவோர் இது தெரிஞ்சுக்குங்க.. கிளம்பி வந்த பெயிரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலம் வாங்கும்போது சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டியிருக்கிறது.. எப்போதுமே நிலத்தை வாங்குவதற்கு முன்பு, பதிவுத்துறையின் வழிகாட்டு மதிப்பு என்ன? என்பதை பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் வில்லங்கம் ஏதாவது இருந்தால், எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியபடி உள்ளனர். அந்தவகையில், முக்கிய அட்வைஸ் தந்துள்ளது.

நிலம் வாங்குபவர்கள், நிலத்தின் மதிப்பு அறிந்து கொள்வதுடன், நேரிலேயே சம்பந்தப்பட்ட மனைக்கு சென்று, மனையின் தற்போதைய விலை நிலவரம் என்ன? பட்டா இடமா? புறம்போக்கு இடமா? ஏதேனும் கோயிலுக்கு சொந்தமான மனையா? என்பதையெல்லாம் கிராம நிர்வாக அலுவலருடன் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

Aadhaar PATTA online Land Owners Original Documents

நில ஆவணங்கள்

அதேபோல, யாரிடம் நிலம் வாங்க உள்ளீர்களோ, அந்த நில ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். தாய்ப்பத்திரத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா? அசல் ஆவணங்கள் சரியாக உள்ளதா? அந்த வீட்டின் மீது ஏதாவது கடன் வாங்கப்பட்டுள்ளதா? வீடு அடமானத்தில் உள்ளதா? என்பதையும் அறிய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியபடி உள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ( FAIRA) சில பொதுவான தகவல்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில் பட்டாவுடன் ஆதார் இணைப்பது ஏன் முக்கியம்? எப்படி செய்வது? பட்டாவுடன் ஆதார் இணைக்கலாமா இல்லையா? என்பது குறித்தெல்லாம் விரிவாக விளக்கியிருக்கிறது. அதில் உள்ளதாவது:

"நம்மால் வாங்கப்பட்ட நிலம் நமக்கே பாதுகாப்பாக இருக்க, அது வருவாய் துறை ஆவணங்களில் சரியாக பதிவாகி இருக்கணும். அதற்காகவே பட்டா (Patta) என்பது முக்கியமான சொத்து ஆவணமாகும். அந்த பட்டாவுடன் நம்முடைய ஆதார் எண்ணை இணைப்பது, அரசு தரவுகள் சரியாக இருக்கும் விதமாகவும், அடையாள முறை முறையாக இருக்கும் விதமாகவும் உதவுகிறது. இது ஒரு கட்டாய நடவடிக்கையாக மாறி வருகிறது. இன்னும் சேர்க்காமல் இருந்தீங்கன்னா, இப்பவே செய்து விடுங்க!

ஆன்லைனில் ஆதார்-பட்டா இணைப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் இணையதளம் மூலம் நீங்கள் சுலபமாக வீட்டிலிருந்தபடியே இது செய்யலாம்.
படி 1:

பதிவுத்துறை அதிகாரப்பூர்வ இணையதளமான
https://eservices.tn.gov.in-க்கு செல்லவும்.

படி 2:

'Aadhaar Linking for Patta' என்ற பகுதியைத் தேர்வு செய்யவும்.

படி 3:

உங்கள் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் பட்டா எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.

படி 4:

உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யவும்.

படி 5:

உங்கள் மொபைலில் வரும் OTP (ஒவ்வொரு முறையும் வரும் பாதுகாப்பு குறியீடு) மூலம் உறுதிப்படுத்தவும்.

படி 6:

Submit பட்டனைக் கிளிக் செய்தவுடன், உங்கள் ஆதார் எண்ணும் பட்டாவும் இணைக்கப்படும்.

(Offline) மூலம் செய்ய விருப்பமா?

நீங்கள் நேரில் சென்று செய்ய விரும்பினால்
உங்கள் வட்டாட்சியர் அலுவலகம் (VAO அல்லது RI) சென்று,
ஆதார் நகல் மற்றும் பட்டா நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

அதிகமாக கேட்கப்படும் சந்தேகங்கள் - சிக்கல்கள்

பட்டா வேறு பெயரில் இருக்கு, ஆதார் என்னுடைய பேரில் இருக்கு. இணைக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது பட்டாவில் இருக்கும் பெயரும் ஆதாரங்கள் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில் உரிமை மாற்றம் (Name Transfer) செய்து பின்னர் இணைக்கலாம்.

ஒரே பட்டாவிற்கு ஒருவருக்கும் மேல் ஆதார் இணைக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது தற்போது ஒரே உரிமையாளரின் ஆதார் மட்டுமே இணைக்க முடியும்.

இப்போதே அதற்கான வேலையை உடனே செய்யுங்கள் எதிர்காலத்தில் நில உரிமை சிக்கல்கள் வரும். முக்கியமாக, அரசு நிவாரணங்கள், மானியங்கள், வேளாண் உதவிகள் போன்றவை பெற முடியாமல் போகும். e-Survey, e-Adangal போன்ற சேவைகள் மூலம் நீங்கள் நிலம் தொடர்பான தகவல்களை நேரடியாக பெற முடியாது.

எனவே, நிலம் வாங்கியது மட்டும் போதாது. அதன் உரிமையை அரசு தரவுகளில் உறுதிப்படுத்தும் முக்கியமான கட்டமாக ஆதார் இணைப்பு இருக்கிறது.. இது அரசு பரிந்துரைக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் செய்யாதவர்கள், இப்பவே இணையதளம் சென்று செய்துவிடுங்கள்.. சிக்கலில்லாத நில உரிமைக்கு இது அத்தியாவசியம்!" என்று பெயிரா அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+