நாலு வேலி நிலம்.. சொத்து படுத்திய பாடு இருக்கே.. அப்பான்னு கூட பார்க்கலியே.. திகைத்து நின்ற சென்னை
சென்னை: தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் சமஉரிமை உண்டு என்றாலும், இதை சில ஆண் வாரிசுகளால் ஏற்க முடிவதில்லை.. சென்னையில் நடந்த கொடுமையை பாருங்க.
பூந்தமல்லியை அடுத்துள்ளது பாரிவாக்கம்.. இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு 63 வயதாகிறது.. இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் இருக்கிறார்கள்.. இவரது 28 வயது மகன் வெங்கடேசன், சொந்தமாக வேன் வைத்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார்.

சொந்த நிலம்: ராஜேந்திரனுக்கு அவரது வீட்டு பக்கத்திலேயே 4 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது.. இந்த நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி தரும்படி, தன்னுடைய அப்பாவை வெங்கடேசன் கேட்டு வந்தார்...
ஆனால் இதற்கு ராஜேந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. தன்னுடைய 3 மகள்களுக்கும் அந்த நிலத்தில் பங்கு பிரித்து தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை வெங்கடேசன் ஏற்கவில்லை.. சகோதரிகளுக்கு சொத்து தரக்கூடாது என்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.. இதனால், அப்பா - மகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
பராமரிப்பு பணிகள்: இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் வீட்டின் அருகே உள்ள, அந்த நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது டியூட்டி முடித்துவிட்டு, வேனில் வந்திறங்கினார் வெங்கடேசன்.. அப்பாவை அந்த நிலத்தில் பார்த்ததுமே, மறுபடியும் அந்த நிலத்தை தனக்கு மட்டுமே எழுதி தர வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.. இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது..
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தன்னுடைய வேனில் ஏறி உட்கார்ந்துகொண்டு, வேகமாக இயக்கினார்.. அப்பா என்றும் பாராமல் ராஜேந்திரன் மீது வேனை ஏற்றினார். வேன் மோதியதில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் சரிந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டார்.. இதைப்பார்த்ததும் வெங்கடேசன், வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்..
கொடுமை: வீட்டுக்கு அருகில் நடந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பூந்தமல்லி போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து ராஜேந்திரன் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. தப்பியோடிய வெங்கடேசனையும் தேடி வருகிறார்கள்.
ராஜேந்திரனுக்கு சொந்தமாக 4 சென்ட் நிலம் இருந்திருக்கிறது.. தன்னுடைய 3 மகள்கள் + 1 மகன் என 4 பங்காக பிரித்து தர ராஜேந்திரன் முடிவு செய்திருந்தாராம்.. சரிசமமாக நிலத்தை பிரித்து தருவதற்காகவே, சம்பவத்தன்று, அந்த நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.. நிலத்தை சமமமாக பிரித்துவிட வேண்டும் என்பதில் தன்னுடைய அப்பா உறுதியாக இருப்பதை ஜீரணிக்க முடியாமலே, வேனை ராஜேந்திரனின் மீது மோதியதாக சொல்கிறார்கள்..












Click it and Unblock the Notifications