தாய் பத்திரம்.. சனிக்கிழமை பத்திரப்பதிவு ரத்து? அதைவிடுங்க.. மூர்த்தி போட்ட போடு.. நடுங்கிய ஆபீசர்ஸ்
சென்னை: சென்னை மற்றும் கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயர உள்ளதாக அமைச்சர் மூர்த்தி அறிவித்திருந்த நிலையில், பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, நேற்றைய தினம், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: "சென்னையில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறது. சதுர அடி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. அதனால், வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். நிலம், வீடு ஆகியவற்றின் மொத்த மதிப்பு அடிப்படையில், அடுக்குமாடி திட்ட வீடுகளின் பத்திரங்களை பதிவு செய்ய, புதிய நடைமுறையை உருவாக்கி வருகிறோம்" என்றார்.
பதிவுத்துறை: இதையடுத்து, பதிவுத்துறை பணி அலுவலர் சங்கம், பதிவுத் துறை அலுவலர் சங்கம், சார் பதிவாளர் சங்கம், பதிவுத் துறை அமைச்சு பணியாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஆலோசனை நடத்தினார்.. அப்போது, பதிவுத் துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி, ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய சங்க நிர்வாகிகள், "பொது இடமாறுதல் வழங்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகங்களில் அடிப்படை பணியாளர்களை நியமிக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை மறுபடியும் பணியில் சேர்க்க வேண்டும்.. சனிக்கிழமை பத்திரப்பதிவு பணியை ரத்து செய்ய வேண்டும்" என்றெல்லாம் நிறைய கோரிக்கைகளை அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
டிரான்ஸ்பர்ஸ்: இதற்கு அமைச்சர் மூர்த்தி அவர்களிடம் சொன்னதாவது: தமிழகம் முழுவதற்கும், ஒரு வழிமுறையை பின்பற்றி தான் டிரான்ஸ்பர்கள் தரப்படுகிறது.. இதில் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
"இனி நாங்கள் யாருமே லஞ்சம் வாங்க மாட்டோம்" என்று இங்கு வந்திருக்கும், சங்க நிர்வாகிகள் யாராவது பகிரங்கமாக அறிவிக்க தயாரா? அப்படி நீங்கள் அறிவித்தால், கேட்கும் இடத்துக்கு டிரான்ஸ்பரை உடனே வழங்குகிறோம்.. முந்தைய ஐ.ஜி., சிவன் அருள் இருந்தபோது, நான்கு மாவட்ட பதிவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆராயப்பட்டு, அவைகள் திரும்ப பெறப்படும். ஆனால், லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட, சஸ்பெண்ட் நடவடிக்கைகளை ஒருக்காலும் திரும்ப பெற முடியாது.
கதிகலங்கிய ஆபீசர்ஸ்: என்னமோ, ஐஜி ஆபீஸ் வந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று சிலர் அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. முடிந்தால் போராட்டம் நடத்தி பாருங்களேன்.. அதனுடைய விளைவுகள், பின்னாடி தெரியவரும்" என்று கறாராக சொல்லிவிட்டார் மூர்த்தி.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications