நில அளவீடு.. நிலத்தை அசால்ட்டா தூக்கிட்டாரு.. அண்ணா நகரில் "அவர்" வீட்டுக்கே போன சிபிஐ.. பரபர சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில அபகரிப்பு தொடர்பான வழக்கு ஒன்று சென்னையில் பரபரப்பை தந்துவிட்டது.. இது தொடர்பாக சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.. இந்த நடவடிக்கையானது, போலீஸ் அதிகாரி மீதே பாய்ந்துள்ளதுதான் பெரிதும் கவனத்தை பெற்றுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு சொந்தமாக 18.25 சென்ட் நிலம் அதே பகுதியில் இருப்பதாக தெரிகிறது.. இந்த நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சரவணன், தேவன், சீனிவாசன் ஆகியோர் அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.. இதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து, அந்த நிலத்தை அபகரிக்கவும் முயன்றுள்ளனர்.

land survey anna nagar sholinganallur

இதனால், அதிர்ச்சி அடைந்த கார்த்திக், இதுகுறித்து, ஆலந்துார் நீதிமன்றத்திலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் புகார் தந்தார்.. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.. அதேபோல, பிரச்சனைக்குரிய இடத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என்று நீலாங்கரை சார் - பதிவாளர் அலுவலகம் மற்றும் சோழிங்கநல்லுார் தாசில்தார் அலுவலகத்திலும் கார்த்தி புகார் அளித்துள்ளார்.

நிலஅபகரிப்பு: இப்படிப்பட்ட சூழலில், கடந்த மே 14ம் தேதி கோபாலகிருஷ்ணன் & தரப்பினர், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு சென்றிருக்கிறார்கள்.. அப்போது 20 ரவுடிகளை அழைத்து, அங்கிருந்த சுற்றுச்சுவரையும் இடித்திருக்கிறார்கள்..

இதற்கு நீலாங்கரை இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்த்பாபு, 10 போலீசாருடன் சென்று பாதுகாப்பு தந்தாராம். இந்த நில அபகரிப்பை தடுக்க முயன்ற கார்த்திக்கையும், அவரது பெற்றோரையும் அந்த கும்பல் ஆபாசமாக வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரிகிறது. இப்படியே பிரச்சனை செய்தால் வழக்குப்பதிவு செய்வேன் என்று போலீஸ் தரப்பிலேயே மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஹைகோர்ட்: அதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் கார்த்திக், நேரடியாக சென்னை சிபிஐ அலுவலகத்திற்கே சென்று புகார் அளித்துள்ளார். அத்துடன், சென்னை ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்... இந்த வழக்கைதான் நேற்று கோர்ட் விசாரித்தது.. அப்போது, ஆனந்த் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டது.. இதையடுத்து, உதவி கமிஷனர் தலைமையிலான சிபிஐ ஐ., அதிகாரிகள், ஆனந்த்பாபு, கோபாலகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்..

அதுமட்டுமல்ல, சென்னை அண்ணா நகர் போலீஸ் குவார்ட்டஸில் உள்ள ஆனந்த்பாபு வீடு மற்றும் இந்த நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த, பெசன்ட் நகரில் உள்ள பெண் வங்கி அதிகாரியின் வீடு உட்பட, 4 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்..

பரபரப்பு : ஆனந்த் பாபு, இப்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு இனஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.. தற்போது பொறுப்பில் உள்ள அதிகாரியின் வீட்டிலேயே, போலீஸ் நுழைந்து சோதனை நடத்தியிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+