சர்வேயரை காலி செய்த தாயும், மகளும்.. அந்த பிரபல வங்கியின் கேஷியர் இவர்தானா? கொஞ்சம்கூட நம்ப முடியல

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்ஷி என்ற புதுமாப்பிள்ளையை, கூலிப்படையை வைத்து கொலை செய்திருந்தார் மனைவி சோனம்.. இப்போது குற்றவாளிகள் கூண்டோடு சிக்கி உள்ளனர். எனினும், இதற்கு பிறகும் கணவனை கூலிப்படை வைத்து கொல்லும் கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது. தெலுங்கானாவில் இளைஞரை கொன்ற வழக்கில் குற்றவாளிகள் கைதான நிலையில், அதுகுறித்த பகீர் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்த தேஜஸ்வரின் என்பவரின் மனைவிதான் ஐஸ்வர்யா.. தனியார் நில சர்வேயராக வேலை பார்த்து வரும் தேஜஸ்வருக்கு கடந்த 17-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. ஆனால், அடுத்தடுத்த நாட்களிலேயே ஐஸ்வர்யாவின் நடத்தையில் தேஜஸ்வருக்கு சந்தேகம் வந்தது.

surveyor telangana bank cashier

ஐஸ்வர்யா - தகராறு

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் தேஜஸ்வர் கேட்டதற்கு, கடுமையாக தகராறு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால், இதற்கு பிறகு தேஜஸ்வரை காணவில்லை.. குடும்பத்தினர் போலீசில் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்தது. அப்போது கூலிப்படையை ஏவி கணவரை, ஐஸ்வர்யா கொன்றது வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது ஐஸ்வர்யாவின் அம்மா கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை செய்துவந்தபோது, அந்த வங்கியில் கேஷியராக பணிபுரிந்தவருடன் ஐஸ்வர்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.. இதனால் அடிக்கடி வீட்டுக்கும் கேஷியர் வந்து சென்றுள்ளார்.. பிறகு தேஜஸ்வருடன் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்த பிறகும்போது, இந்த உறவு நீடித்து வந்துள்ளது.

ஆண் நண்பர் உல்லாசம்

தேஜஸ்வர் ஊரில் இல்லாதபோதும், ஆண் நண்பரை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதுவரை 2 ஆயிரம் தடவைக்கு மேல், கள்ளக்காதலனுடன் செல்போனில் பேசினாராம் ஐஸ்வர்யா.. தேஜஸ்வரின் கண்டிப்பு அதிகமாகவும்தான், அவரை கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

தேஜஸ்வர் சர்வேயர் என்பதால், தங்களது நிலத்தை அளக்க வேண்டும் என்று சொல்லி, கூலிப்படையினரை காரில் அனுப்பி வைத்துள்ளார் ஐஸ்வர்யா.. இறுதியில், காரில் செல்லும்போதே தேஜஸ்வரின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டனர். சடலத்தையும், பன்யம் அடுத்த சுகாரி மெட்டு பகுதியில் வீசிவிட்டது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உண்மைகள் வெளிவந்தன

இதையடுத்து, ஐஸ்வர்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன..

அதாவது, கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் ஐஸ்வர்யாவின் அம்மா சுஜாதா துப்புரவு பணியாளராக வேலை செய்தபோது, அங்கு கேஷியராக வேலை பார்த்தவர் திருமால் ராவ்.. இவருடன் சுஜாதாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.. சுஜாதா விடுமுறையில் சென்றதால், அந்த பணிக்கு ஐஸ்வர்யா சென்றுள்ளார்.. அப்போது திருமால் ராவுடன் ஐஸ்வர்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

திருமால் - உபசரிப்பு

இதற்கு பிறகுதான், ஐஸ்வர்யா வீட்டுக்கு திருமால் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.. மருமகன் வீட்டுக்கு வந்தபிறகும், திருமாலை வீட்டுக்குள் அழைத்து உபசரித்து, மகளுடன் உல்லாசமாக இருக்க செய்ததில் சுஜாதாவுக்கும் பங்கு இருக்கிறதாம்.

ஆனால், இந்த விஷயம் கணவர் தேஜஸ்வருக்கு தெரிந்துவிட்டதால்தான், அவரை கொல்ல ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளார்.. கணவரை கொலை செய்ய 5 முறை திட்டம் தீட்டியிருக்கிறார்.. அவைகளில் தோல்வி அடைந்துவிட்டதால், கூலிப்படையினருக்கு பணம் தந்து, காரையும் தந்து, தன்னுடைய கொலை செய்யும்படி சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

சிக்கிய சுஜாதா

மகளின் கள்ளக்காதலில் மட்டுமல்ல, தேஜஸ்வர் கொலையிலும், ஐஸ்வர்யாவின் அம்மா சுஜாதாவின் பங்கு இருக்கிறதாம்..

இந்த கொலைக்கு பிறகு, கேஷியர் திருமாலும், ஐஸ்வர்யாவும், ரூ,20 லட்சம் கடன் வாங்கிக்கொண்டு லடாக்கிற்கு தப்பி செல்ல முடிவு முடிவு செய்து, இதற்காக ரிசர்வேஷனும் செய்திருந்தார்களாம்.. பிறகு அங்கிருந்து அந்தமான் தீவுகளுக்கு செல்வதெனவும் கள்ளக்காதல் ஜோடி திட்டமிட்டிருந்ததாம். ஆனால், தேஜஸ்வர் கொலையில் அனைத்தும் அம்பலமாகிவிட்டதால், குற்றவாளிகள் அனைவருமே கூண்டோடு தற்போது சிக்கியுள்ளனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+