''ரியல் ஹீரோ ஓய்வெடுக்கிறது!'' - கண்ணி வெடிகளை மோப்ப சக்தியாலே கண்டுபிடித்து விருது பெற்ற எலி மரணம்
சென்னை: கம்போடியாவில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை மோப்ப சக்தியால் கண்டுபிடித்து நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுனையாக இருந்த எலி தற்போது உயிரிழந்தது.
ஒரு எலி நாட்டின் பாதுகாப்புக்கு அரணாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அந்த சந்தேகத்தை இத்தோடு நிறுத்துக்கொள்ளுங்கள். ஒரு எலி, ஒரே எலி நாட்டின் பாதுகாப்பு அரணாக இருந்திருக்கிறது. துணிச்சலுக்கான அரசின் விருதையும் பெற்றிருக்கிறது.
இது நடந்தது கம்போடியா நாட்டில். ஆச்சரியமாக இருக்கிறதா. ஆனால் இது உண்மை என்பதை மறந்துவிடவேண்டாம். 'மகவா' (Magawa) என்ற எலி கண்ணி வெடிகளையும்,வெடி பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்து பலரது உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. அந்த எலிதான் தற்போது உயிரிழந்திருக்கிறது.

மகவா
தாண்சானியா நாட்டில் பிறந்த ஆப்ரிக்க வகை எலி தான் மகவா. இந்த எலிக்கு மோப்ப சக்தி இருந்திருக்கிறது. மேலும் மோப்ப சக்தியை அதிகரிக்கவும் இந்த எலிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதோடு, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு, கம்போடியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

APOPO
பெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் APOPO. இந்த நிறுவனம் ஆப்பிரிக்க ராட்சத எலிகளுக்கு மோப்ப சக்தியைக் கண்டறியும் பயிற்சியை வழங்கியது. அதில் தேர்ச்சி பெற்ற எலிகளை ஹீரோ ரேட்ஸ் என அழைத்தது.

கண்ணிவெடி
சுரங்கங்களை மோப்பம் பிடிக்க எலிகளைப் பயன்படுத்துவதால், ஆயுதங்களைக் களைந்து, ஆயுதங்களை அகற்ற வேண்டும். சமயத்தில் இதனால் மனித உயிரிழப்புகள் நடக்கிறது. இதைக் குறைக்க எலிகளுக்கு மோப்ப சக்தி பயிற்சி கொடுக்கப்பட்டு கண்ணி வெடிகள் இருக்கிறதா என சோதிப்போம்.

வெடிமருந்துகள்
எலிகள் கண்ணி வெடிகள் மற்றும் வெடிபொருட்களை மோப்பம் பிடித்து சொல்வதால், மனித உயிர்கள் பலியாவதை தவிர்க்க முடிகிறது. இந்த ஹீரோ ரேட் மகவா, இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிப்பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டறிந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பதக்கம்
எட்டு வயதான மகவா, தன்னுடைய ஐந்து ஆண்டு காலத்தில் பல வெடி பொருட்களை மோப்ப சக்தியால் கண்டறிந்ததால், துணிச்சலுக்கான உயரிய விருதை மகவா பெற்றது. இந்த விருதினை இங்கிலாந்தின் PDSA என்ற நிறுவனம் மகவாவுக்கு வழங்கியது. கடந்த ஜூன் மாதம் மகவா ஓய்வு பெற்றது.

இறப்பு
மகவா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. கடந்த வாரத்தின் பெரும்பகுதியை வழக்கமான உற்சாகத்துடன் விளையாடியது. ஆனால் வார இறுதியி மகவா எந்த உணவையும் எடுக்காமல் சோர்வாகக் காணப்பட்டது. சரியாகும் என்று நினைத்திருந்தோம். ஆனால் மகவா உயிரிழந்துவிட்டதாக பயிற்சி நிறுவனம் தெரிவித்தது.
நாங்கள் மகவாவின் இழப்பை உணர்கிறோம். மக்வாவின் நம்பமுடியாத பணிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம் என APOPO நிறுவன ஊழியர்கள் அஞ்சலி தெரிவித்துள்ளனர். மக்களைக் காத்த ஒரு ஹீரோ ஓய்வெடுக்கிறது என APOPO நிறுவனம் மகவா குறித்து தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications