Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானதே.. அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.. நீதிபதி பரபர தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என்று நீதிபதி பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

Last day for Senthil Balajis wifes habeas corpus case against Enforcement directorate in MHC

இதில்தான் தற்போது அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானதே. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கி உள்ளார். நீதிபதி பரதசக்ரவர்த்தியின் தீர்ப்போடு ஒத்துப்போகிறேன். செந்தில் பாலாஜி சட்டத்திற்குட்பட்டவர்தான்.

விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த தடையையும் கோர முடியாது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். செந்தில் பாலாஜி குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும், என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

முன்னதாக செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார். அதில், அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.

பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருத்தப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடிக்க விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.

கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்..

நான் தவறு செய்தேன் என்று அவர்கள் கருதினால் கூட எனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல்.. ஆவணமாக ஆதாரம் இல்லாமல் அவர்களால் என்னை கைது செய்யவே முடியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படித்தான் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரிடமே கூட சொல்லவில்லை.

செந்தில் பாலாஜியை சிஆர்பிசி சட்டப்படி கைது செய்ய அமலாக்கத்துறை போலீஸ் கிடையாது. செந்தில் பாலாஜியை கைது செய்யும் வரை என்ன ஆதாரங்கள் இருந்ததோ அது மட்டுமே அவர்கள் கோர்ட்டில் பயன்படுத்த முடியும். கைது செய்யப்பட்ட பின் பிடுங்கப்பட்ட ஆதாரங்களை கோர்ட்டில் பயன்படுத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

அதோடு 24 மணி நேரம் மட்டுமே, அதாவது கோர்ட்டில் ஆஜர் செய்யும் வரை மட்டுமே அமலாக்கத்துறை கஸ்டடி வைத்திருக்க முடியும். அதன்பின் நீதிமன்ற காவல் மட்டுமே. , என்று கபில் சிபல் வாதம் வைத்துள்ளார்.

Last day for Senthil Balajis wifes habeas corpus case against Enforcement directorate in MHC

அமலாக்கத்துறை வாதம்: இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றி சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.

அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உள்ளது.

விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும், என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார்.

நேற்று செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்தார். அதில், அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு இருக்கும் கைது அதிகாரம் என்பது வேறு மாதிரியானது. மணி லாண்டரி செய்து இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். மணி லாண்டரி என்பது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது. அதாவது அழுக்கு துணியை மிஷினில் போட்டு துவைப்பது போன்றது.

பொதுவாக போலீஸ் ஒருவரை விசாரிக்கிறது என்றால்.. ஒரு நபர் குற்றம் செய்தவராக கருத்தப்பட்டால் அவரை விசாரிக்க முடியும். ஆதாரத்தை கண்டுபிடிக்க விசாரிக்க முடியும். ஆனால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய, கைது செய்ய வேண்டும் என்றால்.. அதற்கு முதலில் ஆதாரம் வேண்டும்.

கைக்கு ஆதாரம் வந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒருவரை கைது செய்து அதன்பின் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சக்தி கிடையாது. ஆனால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதோ போலீஸ் போல இதில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்..

நான் தவறு செய்தேன் என்று அவர்கள் கருதினால் கூட எனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல்.. ஆவணமாக ஆதாரம் இல்லாமல் அவர்களால் என்னை கைது செய்யவே முடியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படித்தான் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரிடமே கூட சொல்லவில்லை., என்று கூறி உள்ளார்.

Last day for Senthil Balajis wifes habeas corpus case against Enforcement directorate in MHC

என்.ஆர் இளங்கோ வாதம்: இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ செய்த வாதத்தில், வ செந்தில்பாலாஜிக்கு ஜூன் 18-ம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இதயத் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது. ஆனால், அமலாக்க இயக்குனரகத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் அதை ஜூன் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு மருத்துவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் தனது சிகிச்சையையே ஒத்தி வைத்தார். அப்படிப்பட்ட நபர் விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார் என்று எப்படி கூறுவது. அமலாக்கத்துறைக்கு ஏற்கனவே ஜூன் 17 முதல் 24ம் தேதி வரை 8 நாட்கள் கஸ்டடி கொடுத்துவிட்டனர். ஆனால் அப்போது அமலாக்கத்துறை கஸ்டடி எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டமிட முடியாது, என்று கூறினார். இதற்கு அமலாக்கத்துறை சார்பாக ஆஜாரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மருத்துவமனையிலேயே அவரைக் காவலில் எடுத்திருந்தால், விசாரணையின்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருந்தால், யார் பொறுப்பேற்பார்.. நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அதனால்தான் அப்போது அவரை காவலில் எடுக்கவில்லை என்று பதில் அளித்தார்.

இந்த வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கடைசி கட்ட வாதத்தை இன்று வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து கடைசி கட்ட விசாரணைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+