கடைசி 24 மணி நேரம்.. நாடு முழுக்க சம்பளதாரர்களுக்கு.. போன வார்னிங்.. உடனே லேப்டாப்பை திறங்க!
சென்னை: நாடு முழுக்க திருத்தப்பட்ட (Revised) மற்றும் தாமதமான (Belated) வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. இந்த நாளை தவறவிட்டால்.. அதன்பின் திருத்தப்பட்ட வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
கடைசி கட்ட சிக்கல்களை தவிர்க்க இப்போதே வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்ய வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. டிசம்பர் 31ம் இரவு.. அதாவது இன்று இரவிற்குள் நீங்கள் தாக்கல் செய்த ITR ரிட்டர்ன் ஆய்வு செய்யப்பட்டு உங்களுக்கு பதில் அல்லது refund ல்வழங்கப்படவில்லை என்றால்.. நீங்கள் திருத்தப்பட்ட (Revised) மற்றும் தாமதமான (Belated) வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்வதில் சிக்கல்ஏற்படும் .

2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான திருத்தப்பட்ட (Revised) மற்றும் தாமதமான (Belated) வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். வரித்துறையின் மத்திய செயலாக்க மையம் (CPC) உங்கள் ITR-ஐச் செயல்படுத்தி, அதில் ஆவணங்களின் அடிப்படையில் ஒரு தவறு கண்டறியப்பட்டால் அது உங்களுக்கு அறிவிக்கும்.
வருமான வரி தாக்கல் - கவனிக்க வேண்டிய விஷயம்
ஆனால், டிசம்பர் 31, 2025-க்கு பிறகு ITR ஆய்வு செய்யப்பட்டு, அதன் பிறகு தவறு பற்றிய அறிவிப்பு வந்தால், அந்த பிழையை சரிசெய்து திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலைகளில், மாற்றுத் தீர்வுகளை நாட வேண்டியிருக்கும். திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்வது தவிர வேறு வழிகள் என்னென்ன இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
பட்டயக் கணக்காளர் ஹிமான்க் சிங்லா (Himank Singla) 'X' தளத்தில் இது குறித்து பதிவிட்டு உள்ளார்..அதில் , "2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31.12.2025 ஆகும். அசல் ITRகளுக்கான பல அறிவிப்பு ஆணைகள் (Intimation Orders) இன்னும் நிலுவையில் உள்ளன, அவை 31.12.2025-க்குப் பிறகு செயல்பட வாய்ப்புள்ளது. உங்கள் ITRல் ஏதேனும் தவறு அல்லது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், 31ம் தேதிக்கு பின் திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்ய முடியாது. ITR-U-ஐ தாக்கல் செய்வது மட்டுமே ஒரே வழி, ஆனால் வரி செலுத்துவோர் பணத்தைத் திரும்பப் பெற முடியாது!
திருத்தப்பட்ட (Revised) மற்றும் தாமதமான (Belated) வருமான வரிக் கணக்கு என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி இ-தாக்கல் போர்ட்டல் (ITR e-filing portal) வெளியிட்ட தகவலின்படி, டிசம்பர் 16, 2025 அன்று மாலை 6.39 மணி வரை, வரி செலுத்துவோரால் தாக்கல் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட 8.34 கோடி ITRகளில், 7.68 கோடி ITRகள் செயலாக்கப்பட்டுள்ளன.
ITR செயல்படுத்தப்படவில்லை என்றால் என்ன நடக்கும்?
2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கு (AY 2025-26) தொடர்புடைய 2025-26 நிதியாண்டில் (FY 2025-26) தாக்கல் செய்யப்பட்ட ITR-ஐ, மத்திய செயலாக்க மையம் (CPC) செயல்படுத்துவதுடன், வருமான வரிச் சட்டம் 143(1) பிரிவின் கீழ் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இந்த அறிவிப்பானது, ITR தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டு முடிவடைந்ததிலிருந்து 9 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என பிரிவு 143(1) நிர்ணயிக்கிறது. அதன்படி, 2025 ஜூலை 31, செப்டம்பர் 16 அல்லது டிசம்பர் 31 (தாமதமான ITR) அன்று தாக்கல் செய்யப்பட்ட வரிக் கணக்குகளைச் செயலாக்குவதற்கான சட்டப்பூர்வ காலக்கெடு டிசம்பர் 31, 2026 அன்று முடிவடைகிறது.
இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் CPC வரிக் கணக்கைச் செயல்படுத்தவில்லை என்றால், அதன் பிறகு பிரிவு 143(1)-இன் கீழ் அறிவிப்பை வெளியிடும் சட்டப்பூர்வ அதிகாரத்தை அது இழந்துவிடும்.
தணிக்கை செய்யப்படாத வரி செலுத்துவோருக்கான 2024-25 நிதியாண்டின் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செப்டம்பர் 16, 2025 அன்று ITR தாக்கல் செய்யப்பட்டாலும், இது ITR-ஐ செயலாக்குவதற்கான காலக்கெடுவை விரைவுபடுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ செய்யாது. 9 மாத காலக்கெடு, ITR தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டு முடிவடையும் நாளான மார்ச் 31, 2026 முதல் தொடங்குகிறது, உண்மையான தாக்கல் தேதியிலிருந்து அல்ல.
அதன் விளைவாக, ITR ஜூலை 31, 2025, செப்டம்பர் 16, 2025 அல்லது தாமதமான ITR காலக்கெடுவான டிசம்பர் 31, 2025-க்குள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், CPC-க்கு டிசம்பர் 31, 2026 வரை வரிக் கணக்கைச் செயல்படுத்தி, பிரிவு 143(1)-இன் கீழ் அறிவிப்பை வெளியிட மட்டுமே சட்டப்பூர்வமாக அவகாசம் உள்ளது" என்று சுரானா தெளிவுபடுத்தினார்.
வரித் திரும்பப் பெறும் உரிமை உங்களுக்கு இருந்தால் என்ன செய்யலாம்?
ITR-ஐச் செயலாக்குவதற்கான சட்டப்பூர்வ காலக்கெடுவை CPC கடந்துவிட்டால், தாக்கல் செய்யப்பட்ட ITR இறுதி வடிவம் பெறுகிறது. பிரிவு 143(1)-இன் கீழ் எந்தச் சரிசெய்தல்களையும் (கோரிக்கை அல்லது வேறு விதமாக இருப்பினும்) CPC செய்ய முடியாது. அதாவது நீங்கள் உங்களின் ITRல் மாற்றங்கள் எதையும் செய்ய முடியாது.
உங்கள் ITRல் ஏதேனும் தவறு அல்லது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், 31ம் தேதிக்கு பின் திருத்தப்பட்ட ITR-ஐ தாக்கல் செய்ய முடியாது. ITR-U-ஐ தாக்கல் செய்வது மட்டுமே ஒரே வழி, ஆனால் வரி செலுத்துவோர் பணத்தைத் திரும்பப் பெற முடியாது
அத்தகைய சூழ்நிலைகளில், வரிக் கணக்கின்படி வரிப் பணத்தைத் திரும்பப் பெற வேண்டியிருந்தால், வரி செலுத்துவோர் பிரிவு 244A-இன் கீழ், தொடர்புடைய தேதியிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறும் தேதி வரையிலான வட்டியுடன் வரித் திரும்பப் பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications