Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியின் உடல் இருக்கும் இடத்திலேயே நல்லடக்கம்.. மறைந்த நடிகர் ராஜேஷின் தம்பி உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக 150க்கும் மேற்பட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலமாக அறிமுகமான ராஜேஷ், கன்னிப் பருவத்திலே படத்தின் மூலமாக நாயகனாக நடித்தார்.

அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் காமராஜ் என்ற கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்திருப்பார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Late Actor Rajesh s Brother Appeals for Burial Next to Wife in Chennai

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

திமுக மீது அதிக பற்று கொண்ட அவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் ராஜேஷ் இறப்பு தொடர்பான செய்தியாளர்களை சந்தித்து அவரது சகோதரர் பேசுகையில், அவர் சகலமும் தெரிந்தவர்தான். இலக்கண, இலக்கியத்தை படித்திருக்கிறார். எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர். சரியான அட்வைஸ் கொடுப்பார்.

உடல்நிலை சரியில்லை

அப்படி இருப்பவர், தன்னுடைய உடலையும் நன்றாகவே கவனித்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திடீரென அட்டாக் வந்து, கோவையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னரும் தினமும் உடற்பயிற்சி செய்யக் கூடியவர். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர் கொஞ்சம் சோர்ந்து காணப்பட்டார். மாலையில் கொஞ்சம் விரைவாக தூங்க சென்றார். பின் காலையில் எழுந்து, நாடித்துடிப்பு பார்க்க வேண்டும் என்று கூறினார்.

மருத்துவமனை செல்லும் வழியில்

பின்னர் உடல் சுகம் இல்லை.. மருத்துவமனை செல்லலாம் என்றார். நடக்க முடியவில்லை.. மயக்கம் வருவது போல் உள்ளது என்றார்.. ஆம்புலன்ஸில் ஏற்றிய போதே, அவரின் கண்கள் சொருகிவிட்டது. ஆம்புலன்ஸ் பாதி தூரம் சென்ற போதே, அவர் இறந்துவிட்டார். அவர் பேசாத நிமிஷங்களே இல்லை என்று சொல்லலாம். ராஜேஷ்னாலே பேசி கொண்டே இருப்பார் என்று நடிகர் ராதாரவி கிண்டலாக கூறுவார்.

கனடாவில் இருக்கும் மகள்

கடந்த 3 மணி நேரமாக பேசாமல் இருக்கிறார். வாய் மூடி, கண்கள் மூடி படுத்திருப்பது சோகமாக உள்ளது. எல்லோருடனும் நட்புடன் பழகக் கூடியவர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். ராஜேஷின் மகள் கனடாவில் குடும்பத்துடன் உள்ளார். இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் துபாய் மற்றும் மஸ்கட்டில் இருக்கிறார்கள்.

தாய், தந்தை, மனைவி கல்லறை

அவர்கள் வருவதற்கு 48 மணி நேரமாகும். அதனால் இறுதிசடங்கு 2 நாட்களுக்கு பின்னரே நடக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் தாய், தந்தை கல்லறை உள்ளது. அதற்கு மேல் அண்ணனின் மனைவி கல்லறை உள்ளது. அதற்கு மேல், அண்ணனின் உடலை வைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+