கிரேஸி மோகன் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.. நடிகர் கமல் இரங்கல்
சென்னை: நாடக கலைஞர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட மறைந்த கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் இருந்து முக்கியமான கலைஞர்களில் ஒருவர் கிரேஸி மோகன்.. நாடக கலைஞர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர் இவர்.

மேலும், திரைத்துறையில் கமல்ஹாசனுடன் நெருங்கிய நட்பிலிருந்தவர் கிரேஸி மோகன்.. கமலுக்கு இவர் வசனம் எழுதிய படங்களை இப்போது பார்த்தாலும் சிரிப்பு நிற்காமல் வரும்.
அப்படி பன்முக கலைஞராக இருந்த கிரேஸி மோகன் கடந்த 2019 ஜூன் 10-ந்தேதி காலமானார். கிரேஸி மோகன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அப்போது கமல் உடனேயே இருந்தார்.
மேலும், அவரது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கமல், தனது நண்பருக்குப் பிரியாவிடை கொடுத்தார். இதனிடையே இன்று கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.
இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications