ரூ.150 கோடிக்கு விற்பனை.. விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வாங்கியது யார்?
சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தொடங்கிய ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த கல்லூரி விற்பனை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் அந்த கல்லூரியை வாங்கியது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
சினிமா, அரசியலில் மிகப்பெரிய சாதனைகளை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் படைத்துள்ளார். அவர் உடல்நிலை பிரச்சனை காரணமாக உயிரிழந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், தேமுதிகவை அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக மகன் விஜய பிரபாகரன் செயல்பட்டு வருகிறார்.

2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அதன்பின் மீண்டும் அப்படியொரு வெற்றியை தேமுதிக அடையவில்லை. தற்போது மீண்டும் தேமுதிகவை அதே இடத்திற்கு கொண்டு செல்லவே பிரேமலதா விஜயகாந்த் செயல்பட்டு வருவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் கட்டிய கல்லூரி ஒன்றை அவரின் குடும்பத்தினர் விற்பனை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையை அடுத்த மாமண்டூரில் விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை உருவாக்கினார். விஜயகாந்தின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட கல்லூரியில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என்று ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.
தொடக்கத்தில் கல்லூரி தொடங்க விரும்பாத விஜயகாந்த், அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாகவே இந்த கல்லூரியை ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் சகோதரர் சுதீஷ் நிர்வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியை நிர்வகிப்பதில் சில சிக்கல்களை விஜயகாந்த் குடும்பத்தினர் எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனால் கல்லூரியை பிரபல தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திடம் விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சுமார் 75 ஏக்கரில் தொடங்கப்பட்ட ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியில், பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் 7 பிரிவுகளுக்கும், முதுகலைப் படிப்புகளில் 4 பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி இருந்தது. இந்த கல்லூரியை வாங்கியதில் இருந்து தனலட்சுமி சீனிவாசம் குழுமம் தொடர்ச்சியாக பல்வேறு விளம்பரங்களையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications