சுக்குநூறாக உடையுதா திமுக ஓட்டு? ஆதவ் அர்ஜுனா செம லாபி.. எடப்பாடி பழனிசாமியால் விஜய் ஹேப்பி: பிரபலம்
சென்னை: "ஆதவ் அர்ஜுனா தான் விஜய்க்கு அனைத்து ஆலோசனைகளையும் வழங்குகிறார்.. எடப்பாடி பழனிசாமி, விஜய் இரண்டு பேரையுமே ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க செய்து, இவர் சொல்வதை அவரிடமும், அவர் சொல்வதை இவரிடமும் பேசி வருகிறார் ஆதவ் அர்ஜூனா. அதேபோல எடப்பாடி பழனிசாமியுடனும், டெல்லியில் அமித்ஷாவுடனும் ஒரே நேரத்தில் பேசி வருகிறார் ஆதவ் அர்ஜுனா " என்றெல்லாம் பத்திரிகையாளர் பாண்டியன்
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், செப்டம்பர் 27க்கு பிறகு விஜய்க்கான பலம் அதிகரித்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்களில், அதிமுக கொடியுடன், தவெக கொடியையும் பாரக்க முடிகிறது. முஸ்லிம் வாக்குகள் மொத்தமாக திமுக பக்கம் உள்ளதால், அதிமுகவுக்கு 10 சதவீதம் வாக்கு தேவைப்படுகிறது.
திமுகவின் வலுவான வாக்குகள்
இஸ்லாமிய வாக்குகள், கிறிஸ்தவர்கள் வாக்கு, படித்த தலித்துகளின் வாக்குகள் போன்றவைதான் திமுகவின் மிகப்பெரிய வாக்கு வங்கியாகும். இதை எப்படி உடைப்பது? என்ன செய்வது என்ற தீராத கவலையில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, செப்டம்பர் 27-க்கு பிறகு, 2 அங்குலம் உயர்ந்துவிட்டார்.
பாஜகவிடம் விஜய் சரண்டர் ஆனதுமே, பாஜக அப்படியே விஜய்யை தமிழகத்துக்கு தள்ளிவிட்டது.. இதை பார்த்த அதிமுக தொண்டர்களோ, இனி அதிமுகதான் நமது எதிர்காலத்துக்கான பாதுகாப்பு, அதிமுகதான் நாம் ஆட்சிக்கு வருவதற்கான வலுவான கூட்டணி என்று, விஜய் முடிவு செய்வதற்கு முன்பேயே அதிமுக தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள்.
அறிவிக்கப்படாத கூட்டணி
அந்தவகையில், இப்போது அறிவிக்கப்படாத கூட்டணி கட்சியாக தவெக மாறிவிட்டது. காரணம், அதிமுக, பாஜகவை எதிர்ப்பதைவிட, திமுகவை எதிர்ப்பதே முக்கிய வேலையாக விஜய்க்கு உள்ளது.
பாஜகவின் நோக்கம், திமுகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான்.. அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் விஜய் எப்போது வந்து வலையில் விழுவார் என்று காத்திருக்கிறார்கள். இதற்காக வைக்கப்பட்ட கண்ணியில் மாட்டிக் கொண்டார் விஜய்.. ஆனால், இதில் அதிமுகவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.
கரூரில் முட்டுச்சந்து
எனினும் தவெகவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று அதிமுக ஆறுதல் தந்து வருகிறது.. விஜய்க்காக 1 கோடி அதிமுக தொண்டர்களும் துணையாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்..
சட்டசபையில் விஜய்க்கான வழக்கறிஞராகவே மாறிவிட்டார். கரூரில் முட்டுச்சந்தை தந்ததே இந்த திமுக அரசுதான் என்று குற்றஞ்சாட்டி பேசுகிறார்.. சொந்த எம்எல்ஏக்கள் விஜய்க்கு இருந்தால்கூட இப்படியெல்லாம் சப்போர்ட்டாக பேச மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தனக்காக சட்டசபையில் திமுகவை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தது விஜய்யின் கவனத்தையும் பெற்றுள்ளது.. அவருக்கு தெம்பையும் தந்துள்ளது.
டெல்லி லாபி
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை கரூர் சென்று சந்திப்பதா? அல்லது பனையூருக்கு வரவழைப்பதா? என்ற விவாதம் 3 நாட்களாக விஜய் தரப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. புஸ்ஸி ஆனந்த்தும் இன்றுவெளியே வந்துவிட்டார்..
அவர் இன்று வெளியே வந்துள்ளதற்கு முழு காரணம் ஆதவ் அர்ஜூனாதான்,. டெல்லியில் தன்னுடைய மாமனாருக்கு தெரிந்த அத்தனை லாபிகளையும் செய்துவிட்டார்..
வியூகங்களை வகுக்கும் விஜய்
இப்போது ஆதவ் அர்ஜூனாதான் அனைத்து ஆலோசனைகளையும் வழங்குகிறார்.. எடப்பாடி பழனிசாமி, விஜய் இரண்டு பேரையுமே ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க செய்து, இவர் சொல்வதை அவரிடமும், அவர் சொல்வதை இவரிடமும் பேசி வருகிறார் ஆதவ் அர்ஜூனா.
அதேபோல எடப்பாடி பழனிசாமியுடனும், டெல்லியில் அமித்ஷாவுடனும் ஒரே நேரத்தில் பேசி வருகிறார் ஆதவ் அர்ஜூனா. விஜய்யும் 16 நாள் காரியங்களிலிருந்து மீண்ட விஜய், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை விஜய் தற்போது வகுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications