தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பல சாதனைகள்..பாமக இல்லாமல் தமிழக வரலாறு இல்லை! அன்புமணி பெருமிதம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியை தவிர்த்து தமிழக வரலாற்றை எழுத முடியாது. கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆகின்றன, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பல சாதனைகளை நாங்கள் செய்திருக்கிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை மேடவாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 36ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

anbumani ramadoss pmk ramadoss

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பாட்டாளி மக்கள் கட்சியின் 36 வது ஆண்டு துவக்க விழாவை, கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் தமிழகம், புதுவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் மகிழ்ச்சியோடு எங்கள் கட்சி கொடியை ஏற்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியை தவிர்த்து தமிழக வரலாற்றை எழுத முடியாது. கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆகின்றன, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பல சாதனைகளை நாங்கள் செய்திருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் வருவதற்கு முன்பாகவே எத்தனையோ சாதனைகள் செய்திருக்கிறோம். சமூக நீதி என்று சொன்னால் அதற்கு மறு பெயர் பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் அய்யாவும் தான். இந்தியாவில் இரண்டு இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் நான்கு இட ஒதுக்கீடுகளை போராடி பெற்று தந்தவர் எங்கள் மருத்துவர் அய்யா.

மதுவிலக்கு கொள்கை, சுகாதாரக் கொள்கை, வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என எல்லாவற்றையும் கொண்டு வர காரணம் பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் குட்காவை தடை செய்தது, பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி. இந்தியாவிற்கு 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது, தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தை கொண்டு வந்தது, போலியோவை ஒழித்தது, தமிழ்நாட்டில் மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றியது என இப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆன்லைன் சூதாட்டம் ஆன்லைன் ரம்மி போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி அதன் பிறகு அதிமுக ஆட்சிக் காலத்தில் தடை சட்டம் கொண்டு வந்தார்கள், திமுக ஆட்சி காலத்தில் சட்டம் கொண்டு வந்தார்கள். இப்போது தடைச்சட்டத்தை நீதிமன்றத்தில் தடை செய்திருக்கிறார்கள். ஆனாலும் தமிழக அரசு அந்த தடையை நீக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொடர்ச்சியாக 20 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியால் தான் இன்றைய தமிழக அரசு மட்டுமல்ல கடந்த ஆட்சியாளர்களும் நீர் மேலாண்மை திட்டங்களில் ஈடுபட்டனர்.

இவ்வளவு தகுதி, திறமை, கொள்கை உள்ள கட்சி பாட்டாளி மக்கள் கட்சி 36வது ஆண்டில் கால் வைக்கின்றோம், நிச்சயமாக வரும் காலத்தில் தமிழக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள். கொடுத்தார்கள் என்றால் இந்த திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் 55 ஆண்டுகள் செய்யாததை எங்களது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் செய்து முடிக்க முடியும். அந்த தகுதியும் திறமையும் எங்களுக்கு இருக்கிறது. இந்திய சுகாதாரத் துறையில் 50 ஆண்டுகள் செய்யாததை அன்புமணி ராமதாஸ் 5 ஆண்டுகளில் செய்திருக்கிறார் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த நேரத்தில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சொன்னார். அதே போல் தான் தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, அந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் எங்களிடம் தீர்வு உள்ளது.

ஆனால் இப்போது இருக்கின்ற முதலமைச்சர் அவர்களை சுற்றி இருக்கின்றவர்கள், அவருக்கு சரியான ஆலோசனைகளை வழங்க மறுக்கிறார்கள். அதனால் தான் இன்று தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது, மது பிரச்சினை, கஞ்சா பிரச்சனை, கள்ளச்சாராய பிரச்சனை, சமூக நீதிப் பிரச்சனை, மின்சார பிரச்சனை, காவேரி பிரச்சனை இப்படி எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் வருவது போல் எனக்கு தெரியவில்லை.

திமுக அரசு ஆட்சி வருவதற்கு முன்பு எவ்வளவோ வாக்குறுதி கொடுத்தார்கள். இதே முதலமைச்சர் மின் கட்டணம் ஷாக் அடிக்குது என்று சொன்னார், ஏன் இப்போது ஷாக் அடிக்கவில்லை? அப்போதுதான் ஷாக் அடிக்குமா இவர்களுடைய ஆட்சியில் மின்கட்டணம் ஷாக் அடிக்காதா? அதே வேளையில் கடந்த ஆண்டு வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றார்கள். அதாவது 2.1 விழுக்காடு மின் கட்டண உயர்வை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றார்கள் அதேபோன்று இன்றும் அறிவித்திருக்கலாம்.

இந்த மின் கட்டண உயர்வு அரசாணை என்பது ஜூலை ஒன்றாம் தேதியே அறிவித்தார்கள், ஏன் நேற்று வரை காத்திருந்தார்கள்? ஏனென்றால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக காத்திருந்தார்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை, பித்தலாட்ட வேலை நிச்சயமாக இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடுமையான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.

அமைச்சரின் வீடு அருகே படுகொலை செய்யப்படுவதை நான் பெரிய செய்தியாக பார்க்கவில்லை, ஏனென்றால் தமிழ்நாடு இப்போது மோசமான நிலையில் உள்ளது. கடந்த மாதம் தான் திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்படுகிறார், பிறகு சேலத்தில் அதிமுக ஒன்றிய நிர்வாகி படுகொலை செய்யப்படுகிறார், பிறகு தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னையில் படுகொலை செய்யப்படுகிறார், அதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தொண்டர் கடலூரில் வெட்டப்படுகிறார், தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதுரையில் கொலை செய்யப்படுகிறார். அப்போ முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்? என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முதலமைச்சரின் கீழ் தான் காவல்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முதலமைச்சர் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், இப்படி கொலை கொள்ளை கற்பழிப்பு தற்கொலை கள்ளச்சாராயம் கஞ்சா என மோசமான சூழல் உள்ளது. அதனால் இதற்கு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், இல்லை முதலமைச்சரால் சரியான முறையில் செயல்பட முடியவில்லை என்றால் வேறு எந்த அமைச்சரிடமாவது இந்த சட்டம் ஒழுங்கு துறையை கொடுத்து விடுங்கள். ஏனென்றால் எவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டிருக்க முடியும், தமிழக மக்களுக்கு உயிர் பாதுகாப்பில்லை.

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கெடுவதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் கடை, டாஸ்மாக் சந்து கடை, கள்ளச்சாராயம், கஞ்சா, அபின், ஹெராயின் இப்படி எல்லாம் தான் முக்கிய காரணம் இதை ஒழிக்க வேண்டும். கட்டுப்படுத்தினால் தான் சட்ட ஒழுங்கும் ஓரளவுக்கு சீராகும்" என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+