சட்டசபை தேர்தலில் பிரதிபலிக்கும்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு
தூத்துக்குடி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை என்றால் அந்த எதிர்ப்புணர்வு வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான அண்ணாமலை கூறினார். 10 சதவீத பங்களிப்பை எடுத்து விட வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறோம். திமுக 2.0 ஆட்சி வந்ததும் செய்வதாக சொல்கிறார்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

அந்த நிதி நிலை அறிக்கையில் சில கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். இது தேர்தல் காலம் என்பதால் புதிய அறிவிப்புகளை அறிவிக்க வாய்ப்பில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னது மட்டுமின்றி, 2.0 ஆட்சியில் மீண்டும் ஜூலை மாதத்தில் பிரம்மாண்டமான சில சாதனை அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான சலுகைகளுடன் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.
10 சதவீத பங்களிப்பு
அந்த திட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆனால் பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை தான் இந்தியா முழுமைக்கும் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். 10 சதவீத பங்களிப்பை எடுத்து விட வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறோம். திமுக 2.0 ஆட்சி வந்ததும் செய்வதாக சொல்கிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கு பிடித்தம்
முதல்வர் ஸ்டாலினை விட அதிகளவில் அதிகாரிகள் தான் ஆட்சி செய்கிறார்கள். முதல்வரின் தந்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் கொடுத்த சலுகைகளை கூட, தணிக்கை தடை என்ற பெயரில் ஒவ்வொரு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்து அறிவித்து வருகிறார்கள். இதை எல்லாம் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
பகுதி நேர ஆசிரியர்கள்
இனி நாம் எந்த கோரிக்கை சொல்லியும் அது நிறைவேறப் போவதில்லை. இனி எல்லாமே தேர்தல் முடிந்துதான். தேர்தல் முடிந்ததும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நேற்று வரையிலும் மாற்றுத் திறனாளிகள் உட்பட பலர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வித்தியாசம் அதிகமாக இருப்பதாக கூறி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். அதுபோல, செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என போராடாத பிரிவே இல்லை என்ற அளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்
6,500 கோடி ரூபாயை ஒரே தேதியில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் குடும்பத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய் பிரித்து வழங்கி உள்ளனர். மக்களுக்கு கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டங்கள் எல்லாம் வெற்றி பெறுவதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தான் காரணம் என முதல்வரே கூறுகிறார். ஆனால், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நிதி ஒதுக்கியும் எந்த நன்மையும் செய்யாமல் போய்விட்டார்கள். கோரிக்கைகள் குறித்து பலமுறை போராடியும், முதல்வரை சந்தித்தும் இதுவரை தீர்வு இல்லை.
23000 ஆயிரம்
தேர்தல் வரும் வரை இனிமேல் எதையும் அறிவிக்க மாட்டோம் என்று முதல்வர் கூறிவிட்டார். இனி காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தகுதி தேர்வு,, நியமன தேர்வு எழுதி 23000 ஆயிரம் பேர் காத்து இருக்கின்றனர். 10000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவர்களை நியமனம் செய்யவில்லை என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் பயிற்சி மையங்கள் நடத்துவது கண்டனத்துக்குரியது.
எதிரொலிக்கும்
தமிழகத்தில் 40 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போராட்டதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை என்றால் அந்த எதிர்ப்புணர்வு வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்" இவ்வாறு கூறினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications