Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோகத்தில் மூழ்கடித்த செளந்தர்யா அமுதமொழி.. போராட்டத்திலேயே பிரிந்த உயிர்..! தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த செய்தி வாசிப்பாளரான சௌந்தர்யா அமுதமொழி உடல் நலக்குறைவால் இன்று காலமானார. புற்று நோயுடன் போராடி வந்த அவர் திடீர் மரணம் அடைந்த நிலையில் ஆளுநர் ரவி, அமைச்சர் சுவாமிநாதன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பிரபல செய்தி சேனலான நியூஸ் தமிழ் 24x7-ல் செய்தி வாசிப்பாளராக சௌந்தர்யா அமுதமொழி பணியாற்றி வந்தார். செய்தி வாசிப்பின்றி பல்வேறு நிகழ்வுகளையும் தனது கணீர் குரலால் நேரலையில் எடுத்து வைக்கும் அவரது செய்தி வாசிப்புக்கு பலரும் ரசிகர்கள்.

Soundarya RN Ravi Annamalai


அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் விவாத நிகழ்ச்சிகளிலும் நேரலை நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு அரிதிலும் அரிதான எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய் உருவாகி இருந்தது. இதை அடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதி உதவி அளித்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.எ. ரவி, அமைச்சர் சாமிநாதன், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஆளுநர் ஆர்.என்.ரவி: "சௌந்தர்யா. ஏ அவர்களின் அகால மரணத்தால் வேதனையடைந்தேன். அவர் ஒரு இளம், பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி!"

Soundarya RN Ravi Annamalai


எடப்பாடி பழனிசாமி: ”News Tamil 24x7 தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளராக பணியாற்றி வந்த செல்வி A சௌந்தர்மா, அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அன்புச் சகோதரி செல்வி சௌந்தர்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கரையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவளைப் பிரார்த்திக்கிறேன்,”


அன்புமணி ராமதாஸ்: ”நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா அமுதமொழி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். ஊடக உலகில் சாதித்திருக்க வேண்டிய சகோதரி இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தது அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.”


அண்ணாமலை: ”செய்தி வாசிப்பாளராக @NewsTamilTV24x7 தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர், சகோதரி சௌந்தர்யா அமுதமொழி அவர்கள், உடல் நலக் குறைவால் இன்று காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஊடகத் துறையில் பல சாதனைகள் படைக்கும் கனவுகளோடு இருந்த சகோதரி சௌந்தர்யா அமுதமொழி அவர்களை, இளம் வயதிலேயே பறிகொடுத்திருக்கும் அவரது, குடும்பத்தினருக்கும், NewsTamilTV24x7 ஊடக நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் இருந்து அவர்கள் மீண்டு வரவும், அவரது ஆன்மா சாந்தியடையவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!”

Soundarya RN Ravi Annamalai


அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: "தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூலை 26) காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், ஊடகம் மற்றும் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+