இனி எத்தனை நாட்கள் விடுமுறை.. நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு.. சென்ற சூப்பர் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் வயதானவர்களை கவனித்துக்கொள்வதற்காக ஒரு வருடத்தில் 30 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் என்று மத்திய அரசு கூறி உள்ளது . இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில் அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் விடுப்பு கணக்குகள் வருடத்தில் இரண்டு முறை, அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் வரவு வைக்கப்படுகின்றன. இந்த கணக்கிலிருந்து விடுப்புகள் எடுக்கும்போது கழிக்கப்படும்.

narendra modi dearness allowance

மத்திய அரசு ஊழியர்கள் வயதானவர்களை கவனித்துக்கொள்வதற்காக ஒரு வருடத்தில் 30 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு, 20 நாட்கள் அரை சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் விடுப்பு மற்றும் 2 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு என மொத்தம் 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ராஜ்ய சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டின் விதிகளின்படி, சில குறிப்பிட்ட வகையான விடுப்புகளை விடுமுறைகள் அல்லது பிற விடுப்பு வகைகளுடன் இணைத்துக்கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு மாத சேவைக்கும் 2.5 நாட்கள் என்ற விகிதத்தில் ஊழியரின் சம்பள விடுப்பு கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

அரசு ஊழியர்கள் விடுமுறை

மத்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு நேற்று பதிலளிக்கையில், மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) விதிகள், 1972 வயதான பெற்றோர்களை கவனித்துக்கொள்வது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் விடுப்பு எடுக்க முடியும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில் அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில், "மத்திய குடிமைப் பணிகள் விதிகள், 1972 ஆனது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 30 நாட்கள் சம்பள விடுப்பு, 20 நாட்கள் அரை சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் விடுப்பு மற்றும் 2 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இதனை வயதான பெற்றோர்களை கவனித்துக்கொள்வது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றார்.

மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) விதிகள், 1972 ஜூன் 1, 1972 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த விதிகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் சம்பள விடுப்பு, அரை சம்பள விடுப்பு, மகப்பேறு விடுப்பு, தந்தைவழி விடுப்பு, குழந்தை தத்தெடுப்பு விடுப்பு, பணி தொடர்பான நோய் மற்றும் காயம், மாலுமி விடுப்பு, துறை விடுப்பு, படிப்பு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான விடுப்புகளைப் பெற முடியும்.

சில சிறப்பு வகையான விடுப்புகளான மகப்பேறு விடுப்பு, தந்தைவழி விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்றவை கணக்கில் இருந்து கழிக்கப்படாமல் தேவைப்படும்போது வழங்கப்படும். மேலும், இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பெண் அரசு ஊழியர் 180 நாட்களுக்கு மேல் மகப்பேறு விடுப்பு எடுக்க முடியும். தந்தைவழி விடுப்பைப் பொறுத்தவரை, ஆண் அரசு ஊழியர் 15 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+