விஜய் மீது பாயும் சட்ட நடவடிக்கை? தமிழக டிஜிபிக்கு குழந்தைகள் நல ஆணையம் வைத்த பரிந்துரை
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மற்றும் அவரது பிரச்சார குழுவினர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதாவது JJ Act, 2015 இன் பிரிவு 70 மற்றும் 8-ன் கீழ், டிஜிபி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.
எனவே, JJ act சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் விஜய் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் விஜய்க்கு புதிய தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

விஜய்யின் தவெக
தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டுள்ளது. வரும் 3 மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. முன்னதாக தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது குழந்தைகளை கவரும் விதமாக பேசியிருந்தார். மேலும் குழந்தைகள் தன் அம்மா, அப்பாவிடம் அடம்பிடித்து விசிலுக்கு ஓட்டு போட சொல்லுங்கள் என்பது போல் பேசியிருந்தார்.
விஜய் பேசுகையில், "உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடம்பிடிச்சு அதை சாதிக்கிறீங்கல்ல.. அதே மாதிரி இந்த விஜய் மாமா ஜெயிக்கறதுக்காக உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களை, அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் எல்லாரையும் விசிலுக்கு ஓட்டுப்போட வைங்க.. " என பேசியிருந்தார். விஜய் இப்படி பேசிய வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகின.
விஜய்யின் இந்த வீடியோவை பார்த்த குழந்தைகள் பலரும் விசிலுக்கு ஓட்டு போட வலியுறுத்தி தாய், தந்தைகளிடம் நச்சரித்ததையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் விஜய்க்கு ஆதரவாக குழந்தைகளே பேசிய வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணைய விதிகளின்படி குழந்தைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் செயல்பாடுகளில் பயன்படுத்த கூடாது..
தேர்தல் நடத்தை விதி மீறல்
ஆனால் இந்த விதியினை மீறி விஜய் நேரடியாகவே குழந்தைகளிடம் வாக்கு சேகரித்து தேர்தல் நடத்தை விதி மீறல் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்தனர். அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் விஜய் கட்சி வெற்றி பெறும் என்றும் சிலரால் பரப்பப்பட்டு வந்தது. ஆனால், விஜய்க்கு எதிராக தேர்தல் முடிவுகள் வந்தால், அந்த பிஞ்சு குழந்தைகளால் தாங்கி கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யின் தோல்வி குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடும் என்பதாலும், பெற்றோர்கள் தேர்தல் முடிவு நாளின் போது சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் கூட இது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.
விஜய் மீது சட்ட நடவடிக்கை?
இதில், "தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மற்றும் அவரது பிரச்சார குழுவினர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதாவது JJ Act, 2015 இன் பிரிவு 70 மற்றும் 8-ன் கீழ், டிஜிபி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.
எனவே, JJ act சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் விஜய் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் விஜய்க்கு புதிய தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்!












Click it and Unblock the Notifications