லியோ தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்களின் கார் விபத்து.. தலைமைச் செயலகத்தில் பைக் மீது மோதல்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்திற்கு லியோ படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் வந்த கார் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற வியாழக்கிழமை வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'லியோ' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிடலாம், காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்றது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , 19ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.காலை 9 மணிமுதல் இரவு 1.30 வரை தொடர்ந்து ஐந்து காட்சிகளை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்புவது சிரமம் என தெரிவித்தார்.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. .ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னைக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என குறிப்பிட்டார். இதையடுத்து
அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டதா? அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டு வழக்கை நேற்று ஒத்தி வைத்திருந்தனர்.
மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் பொது நல வழக்கு என்பது ஹீரோ கலாச்சாரம் பற்றியது என தெரிவித்தார். விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம்
என்றும் வாதிட்டார். மேலும் காலை நான்கு மணிக்கு ரசிகர் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்,
மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய நடிகரின் படம் என்றும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும், விதிவிலக்கு அளிப்பது குறித்து அரசிடம் முறையிடுங்கள் அரசு பரீசிலிக்கட்டும் என்று தெரிவித்தார். நேரத்தை கூட்டவோ குறைக்கவோ உத்தரவிட முடியாது. ஆனால் பரீசிலிக்க உத்தரவிடுகிறேன் என குறிப்பிட்டார். 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்க வேண்டும்,
அதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.
அனுமதி அளித்திருக்கக் கூடிய நேரத்தில் எப்படி 5 காட்சிகள் திரையிட முடியும் என அரசுடன் ஆலோசனை நடத்துங்கள் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸை சந்தித்து காலை 7 மணி ஷோவுக்கு அனுமதி கோர செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் குழுவினர் சென்றனர்.
அங்கு அமுதா ஐஏஎஸ்ஸை சந்தித்து மனு கொடுத்துவிட்டு திரும்பினர். அப்போது காரை பார்க்கிங்கில் விட்டிருந்த நிலையில் அதை எடுத்து வர ஓட்டுநரிடம் கூறினர். அப்போது அந்த கார் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. காருக்கு அடியில் இரு சக்கர வாகனம் சிக்கியுள்ளது. அதை எடுப்பதற்கு போராடி வருகிறார்கள். இதனால் தலைமைச் செயலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications